ஜப்பானிய இரண்டு யுத்தக் கப்பல்கள் கொழும்பில் நங்கூரமிட்டுள்ளன. கடற்கொள்ளையர்களை தடுக்கும் நோக்கில் சோமாலிய மற்றும் மத்திய தரைக் கடலில் கண்காணிப்பு மேற்கொள்ளும் கப்பல்களே இவ்வாறு இலங்கைக்கு சென்றுள்ளன.
கப்பல்களின் சில தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நட்பு ரீதியில் இந்தக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டதாக மேற்குக் கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரால் சிரிமேவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கட்டளைத் தளபதி சிரிமேவன் ரணசிங்கவிற்கும் கப்பலின் மாலுமிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட பாரிய இராணுவ ஆயுதங்களை உள்ளடக்கியதாக இந்த கப்பல்கள் அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment