(வீடியோ இணைப்பு) துன்புறுத்தப்பட்ட இலங்கையர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்


 / பூ விற்பனை செய்த பெண்கள் கைது / இலங்கையின் சந்திர வட்டக்கல்லை மீட்கும் முயற்சி தோல்வி

Print Friendly
torture(வீடியோ இணைப்பு) துன்புறுத்தப்பட்ட இலங்கையர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்-
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தாம் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள இலங்கை அகதி ஒருவர், அதற்கான ஆதாரங்களையும் வழங்கியுள்ளார். அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த இலங்கையர் கடந்த 2008ம் ஆண்டு இலங்கையில் இருந்து சட்டவிரோமான முறையில் அவுஸ்திரேலியா சென்றிருந்த போதும், அவருக்கு காணப்பட்ட அச்சுறுத்தலால் அவருக்கு அந்த நாட்டில் குடியுரிமை வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவரது குடும்பம் கடந்த வருடம் அவருடன் அவுஸ்திரேலியாவில் ஒன்றிணைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் அவர் திடீரென இலங்கைக்கு வர நேரிட்ட நிலையில், அவர் இலங்கையில் வைத்து கடத்தப்பட்டு, இவ்வாறு துன்புறுத்தப் பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சந்திர வட்டக்கல்லை மீட்கும் முயற்சி தோல்வி- 
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் சந்திர வட்டக்கல் பிரித்தானியாவில் சுமார் ஐந்தரை இலட்சம் பவுண்ட்சுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த ஏல விற்றபனை இடம்பெற்றுள்ளது.
தேயிலைத் தோட்டம் ஒன்றில் பணியாற்றியவரின் புதல்வர் 1950களில் பிரித்தானிய திரும்பிய போது இந்தப் படிக்கல்லை எடுத்துச் சென்றிருந்தனர்.
இந்த புராதன படிக்கலுக்கு சுமார் 20 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் பவுண்ட்ஸ் மட்டுமே கிடைக்கும் என்று ஏலத்தை நடத்திய நிறுவனம் மதிப்பிட்டிருந்தது. எனினும் இந்தப் படிக்கல் 553,250 பவுண்ட்சுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
இந்த படிக்கல்லை பிரித்தானியாவிடமிருந்து பெற இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.
பூ விற்பனை செய்த பெண்கள் கைது- 
சித்ரா பௌர்ணமி தினமான இன்று களுத்துறை விஹாரைக்கு அருகில் பூக்கள் விற்பனை செய்துகொண்டிருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானோரில் பெண்கள் ஏழுபேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை சுற்றாடல் பிரிவு பொலிஸாரே இவ்வாறு கைது செய்துள்ளனர். பூக்கள் விற்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் இல்லாமல் பாதசாரிகளின் கடவையில் பூக்கள் விற்றவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரா வழக்குத்தாக்கல் செய்யவிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் அந்த பகுதியில் நீண்டநாட்களாக பூக்கள் விற்பனை செய்து வருவதாகவும் அதில் கிடைக்கின்ற வருமானத்தை வைத்தே வாழ்க்கை நடத்துவதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இணைப்பு) துன்புறுத்தப்பட்ட இலங்கையர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்….
torture

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger