தயா மாஸ்டர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம்


 

Print Friendly
ltte.piraba-death-daya.masதயா மாஸ்டர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம்-
புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதிலும் போட்டியிடப் போவதா? இல்லையா? என்பதனை தயா மாஸ்டர் உறுதிப்படுத்தவில்லை. எதிர்வரும் வாரங்களில் இது குறித்து அறிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர்களான கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர், ஆளும் கட்சியின் சார்பில் அரசியலில் களமிறங்கி முக்கிய பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தயா மாஸ்டர் யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் கடமையாற்றி வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.
செப்ரம்பரில் வடமாகாண சபைத் தேர்தல் -ஜனாதிபதி-
வடமாகாண சபைத் தேர்தல் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்றும் அதற்கான நல்லநேரம் பார்க்கப் பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (மணலாறு) வெலிஓயாவில் நேற்று சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
1987ம் ஆண்டு மாகாண சபைகள் நிறுவப்பட்ட பின் வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாக இருக்கும்.
வெளிநாடுகளிலிருந்து பணம் வரும் வரையிலும் காத்துக் கொண்டிருக்காமல் இந்நாட்டு மக்களின் பணத்தில் அபிவிருத்தி திட்டங்களையும் வேலைகளையும் முன்னெடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு முஸ்லிம் மக்களுக்கு காணிவழங்க நடவடிக்கை- 
வடபகுதி முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கம் 1500 ஏக்கர் காணிகளை வழங்க உள்ளதாக கூறப்படுகின்றது. 1990ஆம் ஆண்டில் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கே இவ்வாறு காணி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தின் அரசாங்கக் காணிகளும் காட்டுப் பிரதேசங்களும் இவ்வாறு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், வட மாகாண ஜனாதிபதி செயலணியும், சுற்றாடல் அமைச்சும் இணைந்து இந்த காணி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.
ஜுன் மாதமளவில் மேற்படி காணி வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ltte.piraba-death-daya.mas
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger