மின்னல் தாக்கி குடும்பப் பெண் பலி / மின்சாரக் கட்டண அதிகரிப்பு நியாயமானது -சரத் அமுனுகம
பொருளாதார வீழ்ச்சியினால் தீவுகள், அரண்மனைகளை விற்கும் கிறீஸ்-
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிறீஸ் தற்போது பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளதனால் அதனை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசின் சொத்துகள் விற்கப்பட்டு வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிறீஸ் தற்போது பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளதனால் அதனை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசின் சொத்துகள் விற்கப்பட்டு வருகின்றன.
அரசுக்கு சொந்தமான அழகிய கடற்கரைகள், தீவுகள் மற்றும் அரண்மனைகள் போன்றவை தனியாருக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
அவற்றில் முக்கியமானது ரோதெஸ் தீவு ஆகும். அது 50 மைல் நீளமானது. 1850 ஹெக்டேயர் பரப்பளவு கொண்ட சுற்றுலாதலமாகும். அங்கு அழகிய அபாண்டோ கடற்கரை உள்ளது.
கிரேக்கர்களின் சூரிய கடவுளான அப்போலோவின் கோவிலும் உள்ளது. பழங்காலத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான 100 அடி உயர கொலோங்கல் சிலையும் உள்ளது. இவை தவிர இங்கிலாந்து இளவரசர் பிலிப் பிறந்து வளர்ந்த அரண்மனையும் விற்பனைக்கு தயாராக உள்ளது.
இதற்கு முன்பு மார்ச் மாதம் கட்டார் அரசர் இங்குள்ள 6 இடங்களை விலைக்கு வாங்கியுள்ளார். ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனமும் பல இடங்களை விலைக்கு வாங்கியுள்ளது.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு நியாயமானது -சரத் அமுனுகம-
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமை நியாயமானது எனவூம் அது அத்தியாவசியான ஒரு விடயம் எனவூம் பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமை நியாயமானது எனவூம் அது அத்தியாவசியான ஒரு விடயம் எனவூம் பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த சம்மேளனத்தில் கலந்து கொண்டு மீண்டும் நாடு திரும்பியூள்ள நிலையில் அவர் இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் 65 வீதமாகக் காணப்பட்ட மின்விநியோகம் தற்போது 98 வீதமாகக் காணப்படுகிறது. முழு இலங்கைக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளது. எனவே, பாவனையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை தற்போது காணப்படுகிறது.
வங்கிகளிலுள்ள நிதியை இதற்காக ஒதுக்கீடு செய்தால் வங்கிகளின் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது போகும். அதனால், இந்த புதிய தீர்மானத்திற்காக நாம் சிறிது அர்ப்பணிப்பு செய்ய வேண்டும். நியாயமானது மாத்திரமல்ல, அது அத்தியாவசியமானதொன்றாகும். வேறு எதனையூம் செய்ய வழியில்லை என பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம மேலும் கூறியூள்ளார்.
மின்னல் தாக்கி குடும்பப் பெண் பலி-
அனுராதபுரம் நாச்சியாதீவுக்கு அருகிலுள்ள வெட்டம்குளம் பகுதியில் மின்னல் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இப்பெண் நேற்று மாலைநேரம் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த நேரத்திலேயே மின்னல் தாக்கி பலியாகியுள்ளார்.

.jpg)
Post a Comment