மகளின் 2-வது திருமண செலவுக்கு ‘பேஸ்புக்’ மூலம் பேரனை விற்றவர் கைது-
இன்டர்நெட் மூலம் இளைய தலைமுறையினரிடையே நட்பை ஏற்படுத்திக் கொள்ள உருவாக்கப்பட்ட ‘பேஸ் புக்’ வலைத்தளம், தற்போது இந்தியாவில் குழந்தைகளை விற்பனை செய்யப் பயன்படும் மின்னணு சந்தையாக மாறிப்போன அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இன்டர்நெட் மூலம் இளைய தலைமுறையினரிடையே நட்பை ஏற்படுத்திக் கொள்ள உருவாக்கப்பட்ட ‘பேஸ் புக்’ வலைத்தளம், தற்போது இந்தியாவில் குழந்தைகளை விற்பனை செய்யப் பயன்படும் மின்னணு சந்தையாக மாறிப்போன அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த நூரி என்ற பெண்ணிற்கு கடந்த 3ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த ஓரிரு நாட்களில் ஆஸ்பத்திரி தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனது. இது தொடர்பாக உள்ளூர் போலீஸ் நிலையத்தில் குழந்தையின் தாய் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன குழந்தையை தேடி வந்தனர்.
இந்நிலையில், காணாமல் போன குழந்தையின் புகைப்படத்துடன் ‘குழந்தை விற்பனைக்கு’ என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் ‘பேஸ் புக்’கில் வலம் வந்தது.
இந்த விளம்பரத்தைப் பார்த்த டெல்லியை சேர்ந்த ஒருவர் ரூ.8 லட்சம் தந்து அந்த குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த லூதியானா போலீசார், குழந்தையை விலைக்கு வாங்கிய அமீத்குமார் என்பவரை கைது செய்து விசாரித்தபோது இன்னும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகத் தொடங்கின.
குழந்தையை தொலைத்துவிட்டு தவித்துக் கொண்டிருந்த நூரியின் தந்தை பெரோஸ் கான் என்பவர், ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்ஸ் சுனிதா மற்றும் குர்பிரீத் சிங் ஆகியோரின் உதவியுடன் குழந்தையை கடத்தி வந்துள்ளார்.
அவரது உறவினர் இர்பான் என்பவர் மூலமாக ‘பேஸ் புக்’கில் விளம்பரம் செய்து டெல்லி ஆசாமிக்கு தனது பேரனை ரூ.8 லட்சத்துக்கு பேரம் பேசி விற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த படுபாதக செயலை செய்யத் துணிந்தது ஏன்? என்ற போலீசாரின் கேள்விக்கு பெரோஸ் கான் அளித்த விளக்கம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கணவனால் கைவிடப்பட்ட தனது மகள் நூரிக்கு இரண்டாம் திருமணம் செய்விக்க பணம் தேவைப்பட்டதால், அவளது புதிய இல்லற வாழ்க்கைக்கு பேரன் தடையாக இருந்து விடக்கூடாது என்று கருதி, அவனை விற்க பெரோஸ் கான் முடிவு செய்துள்ளார்.
பேரனை விற்ற பணத்தை வைத்தே, மகளுக்கு இரண்டாம் திருமணம் செய்ய நினைத்த பெரோஸ் கான், இர்பான், நர்ஸ் சுனிதா, குர்பிரீத் சிங் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், குழந்தையை விலை கொடுத்து வாங்கிய அமீத் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டிவி சேனல் மாற்றுவதில் தம்பியுடன் தகராறு: 13 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை!!
திருப்பூர்: திருப்பூரில் டிவி பார்ப்பதில் தம்பியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த 13 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
டிவி என்பது இன்று அனைவரது வாழ்விலும் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. உலகின் ஏதோஒரு மூலையில் நடப்பதை உடனுக்குடன் நம் கண்களுக்கு விருந்தாக்கியதால், அனைவராலும் கொண்டாடப்பட்டது, ஆனால், அதன் மூலம் மக்கள் பல தீய விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர் என்பதும் நிதர்சனமான உண்மை.
அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வாழ்வு ப சமயங்களில் மிகவும் மோசம் என்பதற்கு பின்வரும் சம்பவமும் ஓர் உதாரணமே…
திருப்பூர் மங்கலம்ரோடு ஈஸ்வரமூர்த்தி லே&அவுட் பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம். பனியன் தொழிலாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி. மகள் திவ்யதர்ஷனி (13), மகன் சூர்யபிரகாஷ் (12). கருவம்பாளையம் அரசு பள்ளியில் திவ்யதர்ஷினி படித்து வந்தார்.
பள்ளி விடுமுறை என்பதால் அக்கா, தம்பி இருவரும் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தனர். சேனல் மாற்றுவதில் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. தந்தை ஆதிமூலம் கேபிள் ஒயரை பிடுங்கி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் திவ்யதர்ஷினியின் அம்மாவும், தம்பியும் வீட்டுக்கு வெளியில் இருந்தனர். அப்போது, திவ்யதர்ஷனி வீட்டின் கதவை தாழிட்டு கெரசின் ஊற்றி தீக்குளித்தார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். திருப்பூர் சென்ட்ரல் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
.jpg)
Post a Comment