இலங்கை சனத்தொகையில் 8 வீதமானோர் பல்வேறு புற்றுநோய்களால் பாதிப்பு





இலங்கை சனத்தொகையில் சுமார் 8 வீதமானவர்கள் பல்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, வருடாந்தம் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் ஆக அதிகரித்திருத்துள்ளது.

புற்று நோயாளர்களின் அதிகரிப்பானது, இலங்கையின் சுகாதார துறையில் மேலும் சுமையை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பழுதடைந்து வீசப்படும் ஒரு கையடக்கத் தொலைபேசி பற்றரி 30,000 லீற்றர் தண் ணீரை மாசடையச் செய்வதாக சுகாதார அமைச்சு அண்மையில்நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வீசப்படும் சீ.எப்.எல். மின்குமிழ்களும் மனிதனின் உடல்களுக்குப் பாதிப்பை ஏற்படுதத்தக் கூடிய வகையில் தண்ணீரை மாசடையச் செய்வதாக இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இலத்திரனியல் கழிவுகள் ஒழுங்கான முறையில் அகற்றப்படாமல் தண்ணீர் மாசடைவதாலேயே புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி நிஹால் ஜயதிலக தெரிவித்துள்ளார். 

பழுதடைந்து அகற்றப்பட்ட சீ.எப்.எல். மின் குமிழ்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களால் இயற்கை வளங்கள் மாசடைவதே புற்றுநோய் அதிகரிப்புக்கான முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதரசம் நிறைந்த சி.எப்.எல். மின் குமிழ்களிலிருந்து வெளியேறும் நச்சுத் தன்மையுடைய பதார்த்தம் தண்ணீரை மாசுபடுத்துகிறது. இவ்வாறு மாசடையும் தண்ணீரை பொதுமக்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தும் போது புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. 

இந்த நிலையிலேயே இலத்திரனியல் கழிவுகளை உரிய முறையில் கையாழ்வது தொடர்பில் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் புதிய சுற்றுநிருபமொன்று அனுப்பிவைக்கப் பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலைகளில் இரத்தி ரனியல் கழிவுகளை எரிக்கும்போது கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger