எட்டுமாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது - டாக்காவில் 80 பேர் பலி!


News Service
பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் 8 மாடி கொண்ட கட்டடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்தது. இந்தக் கட்டடத்தில், ஆயத்த ஆடை தொழிலகம் மற்றும் ஷாப்பிங் செண்டர் ஆகியவை இயங்கி வந்தன. இந்தக் கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் இதில் காயம் அடைந்துள்ளனர்.டாக்காவில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள சாவர் ரானா ப்ளாஸா கட்டடத்தில் ஏற்கெனவே விரிசல் விட்டிருந்ததாம். அதனை கட்டட உரிமையாளர் கண்டும் எச்சரிக்கை விடாமல் இருந்துவிட்டாராம். கட்டடத்தின் மேல் தளத்தில் 2000 பேர் இருந்துள்ளனர் என்றும், அது அடுத்தடுத்த மாடிகளில் இடிந்து விழுந்து, கட்டடம் சேதமடைந்து விட்டது என்றும் கூறப்படுகிறது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger