டெல்லியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் எனது கணவரை தூக்கிலிடுங்கள் என குற்றம் சாற்றப்பட்டவரின் மனைவி கூறியுள்ளார்.
டெல்லியில் 5 வயது சிறுமியை தொடர்ந்து 2 நாட்களாக பாலியல் கொடுமைக்கு உட்படுத்தி துன்புருத்திய குற்றத்திற்காக பீகார் மாநிலம் முஜாபர்பூர் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் ஷா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தான் அந்த சிறுமிக்கு எந்த வகையான கொடுமையையும் செய்யவில்லை என்றும், பீகாரை சேர்ந்த மற்றொரு நபர் தான் இந்த கொடூரக்காரியத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனைதொடர்ந்து பொலிசார் மற்றொரு குற்றவாளியையும் கைது செய்துள்ளன நிலையில், 5 வயது சிறுமிக்கு இந்த கொடூரத்தை செய்தது எனது கணவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டால், அவரை தூக்கில் போடுங்கள் என மனோஜ் ஷாவின் மனைவி தெரிவித்துள்ளார்.
Post a Comment