மைனர் பெண்ணை கற்பழித்த 3 புத்த துறவிகள் கைது


மைனர் பெண்ணை கற்பழித்த 3 புத்த துறவிகள் கைது


மேற்கு வங்காளம் மாநிலம், டார்ஜிலிங் பகுதியில் உள்ள கலிம்போங் நகரை சேர்ந்த இளம்பெண், உடல் நலமில்லாத தனது அக்காவிற்கு மருந்து வாங்குவதற்காக கடந்த புதன்கிழமை மாலை நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.

அவருக்கு அருகில் வேகமாக வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய டிரைவர், அந்த பெண்ணை பலவந்தமாக காரில் திணித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தான்.காரின் உள்ளே 3 புத்த துறவிகள் அமர்ந்திருந்தனர். அந்த பெண்ணை வற்புறுத்தி மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை வாயில் ஊற்றி காரினுள் வைத்தே 4 பேரும் மாறி, மாறி கற்பழித்து விட்டு சாலையோரம் உருட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

அரை மயக்க நிலையில், சாலையோரம் கிடந்த அந்த இளம்பெண்ணின் பரிதாப நிலையை கண்ட வழிப்போக்கர்களில் சிலர் அவரை கொண்டுச் சென்று வீட்டில் ஒப்படைத்தனர்.

நடந்த சம்பவத்தை அறிந்த பெற்றோர், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், திகில் விலகாத நிலையில் இருந்த அந்த பெண்ணை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, காரின் டிரைவர் கரண் ரோக்கா, புத்த துறவிகள் சம்டேன் ஸ்டாண்டப் (21), புர்பா டோர்ஜி (20) டாவா டுக்பா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

புத்த துறவிகள் 3 பேரும் கடந்த மாதம் பூட்டானில் இருந்து வந்து கலிம்போங்கில் உள்ள புத்த மடத்தில் தங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger