இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் உதவியில் 20 வீதம் குறைப்பு



அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் உதவிகளை 20 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் மீள்கட்டுமான நிலைமைகளை முன் வைத்தே இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் உதவியில் குறைப்பினை மேற்கொள்ள வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வடகிழக்கு பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டபோதிலும், அதற்கு பலன் கிடைக்கவில்லை. அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களில் இராணுவத்தின் தலையீடு அதிகமாக இருக்கின்றது.
இந்த ஆலோசனையில் தென்னாசிய நாடொன்றுக்கான ஆகக் கூடிய உதவிக் குறைப்பாக இது அமைவதாகவும் இலங்கைக்கு 11 மில்லியன் டொலர் உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியுதவியில் பெருமளவு, நிதித்துறை சீர்திருத்தங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பங்களாதேஷிற்கான நிதி உதவியையும் குறைத்துள்ள அமெரிக்கா, மாலைதீவிற்கான நிதியுதவியை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger