இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நீடிக்கிறது.
வங்கதேசத் தலைநகர் தாக்காவில் கடந்த புதன்கிழமை இடிந்து விழுந்த எட்டு மாடி ஆடைத் தொழிற்சாலைக் கட்டிடத்தில் இருந்து மீட்புப் பணியாளர்கள் மேலும் 24 பேரை உயிரோடு மீட்டுள்ளனர்.
பெண்ணொருவர் உயிரோடு மீட்கப்பட்டதை தாக்காவில் உள்ள பிபிசி முகவர் நேரில் கண்டார். இடிபாடுகளில் இருந்து வெளியே வருகையில் அப்பெண் அழுதார்.
மேலும் பலர் இந்த கட்டிட இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அணியினருடன் தன்னார்வலர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்கின்றனர்.
பெற்றோர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று பிள்ளைகள் இடிபாட்டுக்கு வெளியே ஏங்கி நிற்கின்றனர்.
தெரியவந்துள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை 300ஐத் தாண்டிவிட்டுள்ளது. அது போல் இரண்டு மடங்கு பேரின் கதி என்ன ஆனது என்று தெரியவராமல் உள்ளது.
வங்கதேசத்தின் மிக மோசமான தொழிற்சாலை பெருவிபத்துச் சம்பவமாக இச்சம்பவம் அமைந்துள்ளது.
இந்தக் கட்டிடத்தில் இயங்கிவந்த ஆயத்த ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் இரண்டு பேர் சனிக்கிழமையன்று பொலிசில் சரணடைந்துள்ளனர்.
கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்ட பின்னரும் தொழிலாளிகளைத் தொடர்ந்து வேலை பார்க்குமாறு இந்த உரிமையாளர்கள் பணித்திருந்ததாக செய்திகள் கூறுகின்றன.
Post a Comment