தம்புள்ளையில் வேன்- பஸ் வண்டியொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதுடன் காயமடைந்தவர்கள் அனைவரும் ஆடைத்தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் ஊழியர்களாவர்.
இதேவேளை, மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் வாவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்வண்டியுடன் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment