பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார
தேரரினால் சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன் மற்றும் மைத்திரி குணவர்த்தன
ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என குறித்த இரண்டு சட்டத்தரணிகளும்
தெரிவித்தனர்.
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார
தேரருக்கு எதிரான வழக்கு இன்று திங்ட்கிழமை கோட்டை நீதிவான் திலின கமகே
முன்னிலையில் இடம்பெற்றது.
வட்டரக்க விஜித தேரரின் ஊடகவியலாளர் மாநாட்டிற்கு குழப்பம்
விளைவித்தல் மற்றும் புனித அல் – குர்ஆனை
அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை ஆகியன தொடர்பில் பொதுபலசேனாவின் பொதுச்
செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக கோட்டை நீதிமன்றில் இரண்டு
வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் வட்டரக்க விஜித தேரர்
மற்றும் முஸ்லிம்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன் மற்றும்
மைத்திரி குணவர்த்தன ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
எனினும் இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜுலை 7ஆம்
திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்த
குறித்த இரண்டு சட்டத்தரணிகளும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
இதன்போது அங்கு வாகனத்தில் வந்த பொதுபலசேனாவின் பொதுச்
செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், குறித்த
இரண்டு சிரேஷ்ட சட்டத்தரணிகளையும் மோசமான வார்த்தைகளினால் அச்சுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த இரண்டு சட்டத்தரணிகளும் இந்த விடயம்
குறித்து கோட்டை நீதிவான் திலின கமகேயின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இந்த சம்பவம்
குறித்து முறைப்பாட்டினை பதிவு செய்யுமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு நீதவான்
உத்தரவிட்டார்.
குறித்த உத்தரவினையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட
சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன் மற்றும் மைத்திரி குணவர்த்தன ஆகியோரிடம் நீதிமன்ற
பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
.jpg)
Post a Comment