நீதி மன்றத்தை விட்டும் வெளியேறும்போது சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் முகத்தைக் கூட நான் பார்கவில்லை . நீதி மன்றத்தை விட்டும் வெளியேறும்போது கொரியாவிலுள்ள மக்கள் நாய் சாப்பிடுவது
தொடர்பில் பேசிக்கொண்டு வந்தோம் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று தெரிவித்துள்ளார்
நான் பேசிய அந்த பேச்சு நாயுடன் தொடர்பானது சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஏன் அதை தன் தலையில் போட்டுக்கொள்ள முனைகின்றார் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
சட்டத்தரணி மைத்திரி குணரத்ன உட்பட சட்டத்தரணிகளை பார்த்து ஞானசார தேரர் நாய் என்று கூறியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று விளக்கமளித்த பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உப்புல் ஜெயசேகர, ஞானசார தேரர் மீதான குற்றசாட்டு உண்மையாயின் சட்டத்தரணிகள் சங்கம் ஞானசார தேரருக்கு எதிராக அவமதிப்பு குற்றச்சாட்டு வழக்கை தாக்கல் செய்யும் என ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment