நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும், சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் சமய நம்பிக்கை சுதந்திரம் சார்ந்த விசேட பிரதிநிதி மற்றும் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் சார்ந்த விசேட பிரதிநிதி ஆகியோரை நாட்டுக்கு வருவதற்கு அழைப்பு விடுக்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.
அளுத்க மற்றும் பேருவளை வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற குழுவினர், சிரேஷ்ட உச்சபீட உறுப்பினர்கள் ஆகியோர் இன்று புதன் கிழமை காலையில் கூடி ஆராய்ந்த பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இது தொடர்பில் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அக்கட்சி இவ்வாறு கூறியுள்ளது.

Post a Comment