தென்கொரியா: பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் திணறும் அதிபர்…..!!

 

தென்கொரியாவில் பிரதமர் பதவி என்பது பெருமைமிகு அடையாளத்துக்குரிய பதவியாகத்தான் கருதப்படுகின்றது. மற்றபடி அரசாங்கத்தின் முழு செயல்பாடும் அதிபரைச் சுற்றியே உள்ளது. ஆனால் இந்தப் பதவிக்கு மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி தேவைப்படுகிறது.
தென்கொரியாவின் பிரதமராக இருந்த சுங் ஹோங்- ஒன் கடந்த ஏப்ரலில் அங்கு நடந்த மோசமான படகு விபத்தைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். முறையான பாதுகாப்பு வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் அளவுக்கு அதிகமான மக்களை படகு சவாரியில் ஏற்றிக்கொண்டதில் படகு கவிழ்ந்து 300-க்கும் மேற்பட்டோர் இறக்க நேர்ந்தது அங்கு பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தார்மீகப் பொறுப்பேற்று அவர் பதவி விலக நேர்ந்தது.
இதனைததொடர்ந்து அந்நாட்டின் அதிபர் பார்க் ஜியுன் ஹை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான அன் டைய் ஹீயை பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்தார். ஆனால் அரசு பதவியைத் துறந்த பின்னர் தனிப்பட்ட முறையில் அவர் ஈட்டிய வருமானம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து கடந்த மாதம் அதிபர் ஹீயின் மீதான தனது பரிந்துரையைத் திரும்பப் பெற நேரிட்டது.
பின்னர் இரண்டாவது தேர்வாக 65 வயது நிரம்பிய முன்னாள் பத்திரிகையாளரான மூன் சங் கியூக் அதிபரால் தேர்வு செய்யப்பட்டபோது இந்தத் தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தையே அளித்தது. ஆனால் கடந்த 1910-45 வரையிலும் கொரிய தீபகற்பத்தில் ஜப்பானின் காலனி ஆட்சி நடைபெற்றது குறித்து அவர் வெளியிட்ட கருத்துகள் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகின.
இந்த கருத்துகள் பெரிய அரசியல் போர்க்களத்தையே தோற்றுவிக்க இறுதியில் மூனும் தனது தேர்வை விட்டுத்தர வேண்டியதாயிற்று. அதிபருக்கு உதவ வேண்டும் என்றுதான் நினைத்திருந்ததாகவும்இ ஆனால் தனது ராஜினாமாவே அவருக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் மூன் இன்று வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தென் கொரிய அதிபரின் பல முக்கியமான அரசியல் நியமனங்கள் பிரச்சினைக்குள்ளாகிய நிலைமையில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற படகு விபத்து அவரது புகழின் அளவை மிகவும் குறைத்துள்ளது. இந்த நிலையில் இரண்டாவது பிரதமர் வேட்பாளர் தேர்வும் தோல்வியில் முடிந்தது அதிபருக்கு மற்றொரு அடியாகவே விழுந்துள்ளது
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger