மோடி தலைமையிலான மத்திய அரசு 30 நாட்களை கடந்துள்ளது. இது குறுகிய காலமாக இருந்தாலும், இந்த நாட்கள் மக்களுக்கு நல்ல நாளாக அமையவில்லை என்று ஐக்கிய ஜனதா தலைவர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசு தங்களது திறமையான ஆட்சியை நிரூபிக்க 30 நாட்கள் என்பது மிகவும் குறைந்த நாட்களே. மோடியிடம் இருந்து மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அவரது செயல்பாடுகள் தேர்தலின்போது மக்களுக்கு வாக்குறுதி கொடுத்ததுபோல் நன்றாக அமையவில்லை என்று நிதிஷ்குமார் கூறினார்.
மோடி பிரதமரானதும் அவருக்கு நிதிஷ்குமார் நன்றி தெரிவித்தார். அதற்கு முன் பா.ஜனதா மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment