மதுபோதையில் மனைவிகள்; குடிபோதையில் 15 வயது மகளை கற்பழித்த கொடுமை தொழிலாளி கைது


மங்களூர் அருகே குடிபோதையில் 15 வயது மகளை கற்பழித்ததாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் பற்றி விவரம் வருமாறு:–

கூலி தொழிலாளி 

மங்களூர் அருகே முல்கி போலீஸ் எல்லைக்குட்பட்ட கே.எஸ்.ராவ்நகர் லிங்கப்பய்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் விட்டலா (வயது 42). கூலித்தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியின் பெயர் ஹரிணி. இரண்டாவது மனைவியின் பெயர் கில்டா. இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர்.

விட்டலா இரண்டு மனைவிகளுடனும், 5 குழந்தைகளுடனும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு மது வாங்கிச் சென்ற விட்டலா அவரது 2 மனைவிகளுக்கும் மது ஊற்றி கொடுத்து தானும் குடித்தார். குடிபோதையில் அவருடைய இரண்டு மனைவிகளும் மயங்கிய நிலையில் இருந்தனர்.

மகள் கற்பழிப்பு

அப்போது வீட்டில் இருந்த முதல் மனைவி ஹரிணியின் மகள் சுவேதாவை(வயது 15. பெயர் மாற்றப்பட்டுள்ளது). குடிபோதையில் விட்டலா பலவந்தமாக கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் உன்னை கொன்று விடுவேன் என்றும் அவர் சுவேதாவை மிரட்டியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து சுவேதா அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்களிடம் அழுதுக் கொண்டே கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் முல்கி போலீசில் புகார் கொடுத்தனர்.

தொழிலாளி கைது 

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த முல்கி போலீசார் மகளை கற்பழித்ததாக விட்டலாவை கைது செய்தனர். மேலும் சுவேதாவை போலீசார் முல்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெற்ற மகளை, தந்தையே கற்பழித்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து விட்டலாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger