Sep.
03 Comments
Off
பிறை என்பது முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படையான
பல இபாதத்துகளுடன் தொடர்புபட்ட ஓர் அம்சமாகும். பிறை விடயத்தில் தலைமைகள் விடும்
தவறு ஒட்டு மொத்த சமுதாயத்தின் இபாதத்துகளை பாதிப்பதோடு வீணான சர்ச்சைகளை
தோற்றுவிப்பதற்கும் காரணமாக அமைந்துவிடும். இதன் பார தூரத்தை உணர்ந்த எமது ஜமாஅத் ‘பிறைக்குழுவை’ முன்பிருந்தை
விட பல மடங்கு வீரியத்துடன் செயற்பட வைக்கும் நன்னோக்கில் புதிய அங்கத்தவர்களையும், புதிய
நிர்வாகக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளது.
இதன் அடிப்படையில் பின்வரும் அன்பர்கள் ஸ்ரீ
லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய பிறைக்குழு உறுப்பினர்களாக தெரிவு
செய்யப்பட்டுள்ளனர்.
உறுப்பினர்கள்.
1. R.M றியாழ் (தலைவர் SLTJ ) –
0774781471
2. R. அப்துர் ராஸிக் – 0774781473
3. M.T.M. பர்ஸான் –
0779481767
4. M.F.M ரஸ்மின் –
0771081996
5. M.R முஈனுத்தீன் – 0777176321
பிறை விவகாரம் தொடர்பாக ஜமாஅத் தலைமை நிர்வாகக்
குழு பல அமர்வுகள் கலந்தாலோசித்தப் பிறகு எடுத்துள்ள தீர்மானங்கள்.
1.
திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
சுன்னாவின் படியும் ஒவ்வொருவரும் தத்தமது பகுதியில் வெற்றுக் கண்களால் பிறையை
பார்த்து நோன்பையும் பெருநாளையும் தீர்மானிக்க வேண்டும் எனும் அடிப்படையில் ஜமாஅத்
பிறை விவகாரத்தை தீர்மானிக்கும்.
2.
ஜமாஅத் தலைமையகத்தில் இதற்கென ஒரு தனிக்குழு
செயல்படும். இக்குழுவுக்கு பொறுப்பாளராக ஜமாஅத்தின் தலைவர் செயல்படுவார். அவருடன்
இன்னும் 04 உறுப்பினர்கள் பிறை குழுவின் உறுப்பினர்களாக
செயல்படுவார்கள். கிளைகளில் பிறை குழு பொறுப்பாளராக அந்தந்த
கிளைகளின் தலைவர் செயல்படுவார்.
3.
இக்குழுவின் மூலம் பிறை பார்க்க வேண்டிய நாளான 29 நாளுக்கு
முதல் நாளில் இலங்கை முழுவதும்SLTJsms மூலம் ‘நாளைய
தினத்தில் மஃரிபுக்கு பிறகு (சூரியன் அஸ்தமித்ததில் இருந்து) பிறை தெரிந்தால்
உடனடியாக தொடர்பு கொள்ளவும்’ என்ற வாசகங்களுடன் பிறைக்
குழுவில் தலைமை உறுப்பினர்களாக இருப்பவர்களின் தொலைபேசி எண்களையும் சேர்த்து பொது
மக்களுக்க தகவல் அனுப்பி வைக்கப்படும்.
4.
தேசிய பத்திரிக்கைகளான முஸ்லிம் முரசு, நவமணி
மற்றும் விடிவெள்ளி ஆகிய பத்திரிக்கைகளிலும் பிறை பார்க்க வேண்டிய நாள் பற்றிய
அறிவிப்பு விடுக்கப்படும்.
5. இலங்கை
முழுவதும் இருக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிராந்திய மற்றும் கிளை
உறுப்பினர்களுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டு குறிப்பிட்ட நாளன்று இலங்கை
முழுவதும் பிறை பார்பபதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
6. பிறை
பார்த்தாக தகுந்த சாட்சிகளுடன் தகவல் தெரிவிக்கப்பட்டால் பிறை குழு
அத்தகவலை ஊர்ஜிதம் செய்த பிறகு பிறை தென்பட்ட தகவலை sms ஊடாகவும்
ஜமாத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானwww.sltj.lk வாயிலாகவும்
ஜமாஅத் பொது மக்களுக்கு தகவல் அறிவிக்கும்.
7. தேசிய
பத்திரிக்கைகளான முஸ்லிம் முரசு, நவமணி மற்றும் விடிவெள்ளி ஆகிய
பத்திரிக்கைகளிலும் பிறை தென்பட்ட தகவல் உத்தியோகபூர்வமாக பொதுமக்களுக்கு
அறிவிக்கப்படும்.

Post a Comment