நுவரெலியாவில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொள்ளையிடுதல் அதிகரிப்பு



அண்மைக்காலமாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பொது மக்களிடம் கொள்ளையடிக்கும் செயற்பாடு அதிகரித்து வருவதாக நுலரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது கொள்ளைக் கும்பல் நகர்ப்புறங்களிலும் ஆட்டோக்களில் உலாவி வருகின்றது. எனவே பொது மக்கள் மிக அவதானமாக செயற்படுமாறு நுவரெலியா பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு கொள்ளையடிக்கும் கும்பல் நாங்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் நாங்கள் வியாபாரிகள் என்றும் நண்பர்கள் போல் பாசாங்கு வார்த்தைகளை பேசி குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து கொள்ளை அடித்த பின்னர் மயக்கமானவரை காட்டுப்பகுதியில் கைவிட்டுச்செல்லும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
எனவே இவ்வாறான கொள்ளையர்களிடமிருந்து பொது மக்கள் ஏமாந்து விடாமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger