கருத்தடை, கருக்கலைப்பு மாத்திரைகளை இலங்கைக்கு கொண்டுவந்த நபர் விமானநிலையத்தில்



வைத்தியர் என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான கருக்கலைப்பு மற்றும் கருத்தடை மாத்திரைகளை இலங்கைக்கு கொண்டுவந்த நபரொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கருக்கலைப்பு மாத்திரைகள் 17,740 , கருத்தடை மாத்திரைகள் 3,200, வயகரா மாத்திரைகள் 1000 ஆகியவற்றை கொண்டுவந்துள்ளார். இவற்றின் மொத்தப் பெறுமதி 20 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மும்பையிலிருந்து இன்று காலை இலங்கைக்கு வந்த ஜெட் எயார்வேஸ் விமானத்திலேயே இவர் இலங்கைக்கு வந்துள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான அந்நபர் ஆரம்பத்தில் தன்னை வைத்தியர் என கூறியுள்ளார்.
அவரைக் கைதுசெய்துள்ள சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger