வவுனியாவில் பெற்ற குழந்தையை தாய் மண்ணுக்குள் புதைத்த சம்பவமொன்று இன்று (12) இடம்பெற்றுள்ளது.
வவுனியா கிடாச்சூரி அம்மிவைத்தான் கிராமத்தில் பிறந்து ஒரேநாளான தனது குழந்தையை மண்ணை வெட்டி புதைத்து விட்டு தாய் தலைமறைவாகிவிட்டதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கணவன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் 7 வயது மகனுடன் அம்மிவைத்தான் கிராமத்தில் வசித்து வந்த பெண்ணொருவர் இன்று (12) குழந்தையொன்றை பிரசவித்திருந்த நிலையில் அதனை உடனேயே மண்ணினுள் புதைத்துள்ளார்.
இவ்விடயம் அயலவர்களினால் பொலிஸாருக்கும் எனக்கும் அறிவிக்கப்பட்டதன் அடிப்டையில் பொலிஸார் விசாரணைகளை கண்டுள்ளனர்.
அத்துடன் மேற்படி தாய்க்கு 7 வயதுடைய மகன் உள்ள நிலையில் தற்போது அத்தாய் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் குழந்தை புதைக்கப்பட்தாக தெரிவிக்கப்படும் இடத்தில் குழந்தையின் சடலத்தை மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

Post a Comment