எகிப்தின் அரசியல் களமும், உணரப்படவேண்டிய உண்மைகளும்.

Jul. 14 Comments Off
(எகிப்தில் கடந்த ஒரு வருடமாக ஆட்சி செய்த இஸ்லாமிய பெயர் தாங்கி இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் ஜனாதிபதி முர்சி பதவி கவிழ்க்கப்பட்டுள்ள இந்நேரத்தில் எகிப்தில் நடந்த மக்கள் புரட்சி மற்றும், ஆட்சி கலைப்பு தொடர்பான ஆக்கம்).
எகிப்திய அரசியலில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை தொடர்ந்து ஜனநாயக ரீதயில் இடம்பெற்ற முதலாவது சுயாதீன தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றவர் இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை சேர்ந்த கலாநிதி முஹம்மது முர்சி அவர்கள் .

தனது ஒருவருட ஆட்சியின் முடிவில் மீண்டுமொரு மக்கள் புரட்சியின் மூலம் இராணுவ உதவியுடன் பதவி கவிழ்க்கப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தில் ஆட்சி கவிழ்ப்புக்கான காரணங்களை  விரிவாக ஆராய்வது பொருத்தம் என நினைக்கிறன்.

எகிப்தின் அரசியல் களம் என்பது சற்று விதியாசமானது இஸ்லாமிய ஆட்சிமுறையை ஏட்படுத்துவதே நோக்காக கொண்ட ஒரு அணியும் அதற்கு முற்றிலும் எதிரான ஒரு அணியும் இங்கு காணப்படுகிறது.  இஸ்லாமிய அணிகளை பொறுத்தவரையில் இஹ்வானுல் முஸ்லிமீன்களின் சுதந்திரதிட்கும் நீதிக்குன்மானகட்சியும் ,சலபிகளின் அந்நூர்கட்சியும் பிரபல்யமானவை.
இவ்விரு இஸ்லாமிய கட்சிகளின் மக்கள் செல்வாக்கை பொறுத்தவரையில் சலபிகளின் அந்நூர் கட்சி முதல் நிலையிலும் இஹ்வானுள் முஸ்லீமீன்களின் அரசியல் கட்சி இரண்டாம் நிலையிலும் உள்ளது  .
இந்த மக்கள் செல்வாக்கை நிர்ணயப்படுதிக் கொண்ட நிலையில் அதிபர் தேர்தலை சந்தித்த இஸ்லாமிய அணிகள்  உள் நாட்டின் பொருளாதார, அரசியல் ஸ்த்தீரண தன்மைமற்றும் உலக அரசியல் ஒழுங்கு போன்றவற்றை கருத்தில் கொண்டு  அதிபர் தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் பங்கு பெறுவதில்லை என்ற முடிவையே எடுத்திருந்தன.
இந்த வாக்குறுதியை முன்வைத்தே பாராளுமன்ற தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமீன்கள் கிறிஸ்த்தவர்களுடனும் மதச்சார்பற்றவர்களுடனும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினர் .
ஆனால் அதிபர் தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமூன்கள்  இந்த வாக்குறுதியை காப்பாற்ற தவறியமை ஆட்சி கவிழ்புக்கான முதல்க் காரணியாக கருதமுடியும் .
இந்த தேர்தலில் ஏற்பட்ட முறுகல், அதனை தொடர்ந்து வந்த  தோல்வி போன்றன  மதசார்பற்றவர்களிடம்  பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. காரணம் அரபு வசந்தத்தின் மிக முக்கிய பங்காளிகள் இவர்கள் என்பதே. .
இரண்டு பெரும் தவறுகளை இந்த இடத்தில் இக்வானுல் முஸ்லிமூன்கள் செய்திருந்தனர்.
ஒன்று நாடளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய இயக்களில் அதிகூடிய வாக்கு வங்கி கொண்டவர்கள் நாங்கள்தான் ஏனைய  இஸ்லாமிய கட்சிகள் மக்கள் செல்வாக்கு கொண்டவை அல்ல.  இஸ்லாமிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றுதல் என்பது சாத்திய குறைவானது என்று கருதினர்.
எனவே பொய்யான வாக்குறுதிகைளை வழங்கி கிரிஸ்தவர்களுடனும் மதசார்பற்றவர்களுடனும் மார்க்கம் விரும்பாத  தங்களின் கொள்கைக்கு முற்றிலும் தவறான பல விட்டுகொடுப்புகளை முன்வைத்து  கூட்டணி அமைத்தனர்.
எந்தளவுக்கு என்றால் தங்களின் அரசியல் கட்சியின் பிரதித்தலைவராக ஒரு கிரிஸ்தவரை நியமிக்கும் அளவுக்கு இக்வான்களின் நிலை மாறிபோயிருந்தது.
இரண்டாவது எந்த வாக்குறுதிகளை முன்வைத்து இஸ்லாமிய விரோதிகளின் வாக்குகளை பெற்றார்களோ அதை நிறைவேற்ற தவறியமை.
அதில் பிரதானமானது சலபிகளின் கட்சியான அந்நூர் கட்சியின் செல்வாக்கை பாராளுமன்ற தேர்தலில் அறிந்து  கொண்ட இஹ்வானுல் முஸ்லிமூன் சலபிகள் அதிபர் தேர்தலில் பங்கு கொள்ள மாட்டோம்என்ற வாக்குறுதியை மிகச் சரியாக நிறைவேற்றுவார்கள் என்பதை  கணித்திருந்தனர்.
எனவே நாடாளுமன்றத்தில் நடு நிலையாளர்களாக பரிணமித்தவர்கள் அதிபர் தேர்தலில் கிலாபாவை? நோக்கி கடும்போக்காளர்களாக  பயணமானார்கள் .
அதிபர் தேர்தலின் பின்னரான இக்வானிய ஆட்சியின் நகர்வுகள் இக்வானிய தலைமையகத்தின் முழு நிகழ்சி நிரலுக்குள் மூழ்கிப்போயிருந்தது.
காரணம் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களினதும் அவர்களது ஊடக ஒழுங்கு முறையின் எதிர் பாராத தாக்குதல்களினாலும், நாடாளுமன்றத்தை சட்டத்துறை  அதிரடியாக தடை செய்ததும் இக்வான்களை ஒரு கணம் அதிர வைத்துவிட்டது.
இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு  அரச கதிரையில் ஒய்யாரமாய் உட்கார வேண்டுமானால் மதச்சார்பற்றவர்களின் ஆதரவாளர்களாக மாறுவதை விட வேறு ஒரு வழி இக்வானிய உயர் பீடத்திதிடம் இருக்கவில்லை.
எனவே  மாபெரும் இஸ்லாமிய சக்தி எகிப்தில் இருப்பதையும் தமது ஆட்சிக்கு  ஆபத்தென்றால் தங்களோடு இஸ்லாமியர்கள் இணைந்து நிற்பார்கள் என்பதையும், தமது  பயணம் கிலாபா நோக்கியது  என்ற விடயங்கள் எல்லாவற்றையும் சீர்தூக்கிப்பார்க மறந்தே போனார்கள். மீண்டும்  இஸ்லாத்தை கருவறுக்க நடு நிலையாளர்கள்(?) ஆனார்கள்.
இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு மீண்டும் மதச்சார்பற்றவர்களின் மடி தேடியது.
இக்வான்களை இஸ்லாமியர்களுக்கு புடம் போட்டுகாட்டிய மிகசிறந்த தருணங்கள் .
இதன் பின்னரான இவர்களது அரசியல் அணுகுமுறை, இஸ்லாமிய இயக்ககங்களை பார்த்து இவர்களெல்லாம் இஸ்லாமிய இயக்கங்களா?? துரோகிகள்  என்று எக்காரணதிற்காக விமர்சித்தார்களோ அது அத்தனையையும் அசிங்கப்படாமல் அரங்கேற்றும்  தருணமாக இருந்தது. இன்னொரு முறையில் சொன்னால் தங்களை தாங்களே தூற்றிகொண்ட புத்திஜீவிகள் !!!!!!.
இரண்டாவது காரணம் .
இவர்களின் இஸ்லாமிய கிலாபாவில் ?? மெய்சிலிர்க்க வைக்கும் சில சேவைகள்.
(1) ஜனாதிபதியின் உதவியாளராக கிரிஸ்த்தவ பெண்ணை நியமித்தது.
(2) யாப்பு வரைபில் நாட்டின் இறைமை மக்களிடம் தான் இருக்க வேண்டும் என்று  இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் எழுதமுனைந்த சந்தர்பத்தில் இஸ்லாமிய கட்சியான அந்நூர் மறுப்புதெரிவித்து அல் அஸ்ஹர் பல்கலைகழக உயர்பீடத்திடம்தான் அந்தஅதிகாரம் இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்த சந்தர்பத்தில் தனது லெபறல் தோழர்களை பகைத்துகொள்ளாமல் ஒதுங்கி நின்று இஸ்லாமிய பற்றை ?? வெளிப்படுத்தியது.
(3) சினிமா கூத்தாடிகளை உலமாக்கள் விமர்சித்தார்கள் என்ற காரணத்திற்காக உலமாக்களை சிறையில் அடைத்தது மட்டுமல்லாமல், சினிமா கூத்தாடிகள் மனமுடைந்து போய்விடக்கூடாது என்பதற்காக அவர்களை தேடிச்சென்று ஆறுதல் அளித்து, நீங்கள் சிறந்த சேவை செய்கிறீர்கள் அதை இன்னும் சிறப்பாக செய்யுங்கள் என்று விபச்சாரத்தை ஊக்குவித்த ஒரே இஸ்லாமிய தலைவர்?? முர்சி. (அந்த அறிஞர் இன்னும் சிறையில் இருக்கிறார் )
(4) சில காவல் துறை அதிகாரிகள் இஸ்லாமிய விழுமியங்களை பேணினார்கள் (தாடி வைத்திருந்தார்கள் ) என்ற ஒரே காரணத்திற்காக (நீதிமன்றம்  பணிக்கு அவர்களை மீளளைக்குமாறு தீர்ப்பு வழங்கியும் கூட) இக்வானிய கிலாபாவால்(?) அவர்களை பணிக்கமர்த்த முடியவில்லை, காரணம் தனது இஸ்லாமிய விரோத தோழர்களை பகைத்து கொள்ள விரும்பாமை.
இஸ்லாமிய பாதையில் பயணிக்கிரார்கள் என்ற விமர்சனம் வந்து விடக்கூடாது என்பதில் மிகக்வனமாக இருந்தார்கள்.
(5) அமைச்சரவையை அமைப்பதற்கான கூட்டங்களில் இஸ்லாமிய கட்சிகளுக்கு உரிய அந்தஸ்து வழங்காமல் புறக்கணித்து கிருத்தவர்களையும் மதச்சாற்பற்றவர்களையும் கொண்டாடினார்கள். தங்களின் இயக்கம் சார்ந்தவர்களுக்கு மட்டும் தாராள தன்மை வழங்கினார்கள் .
புரட்சிக்கு பின்னரான ஒரு ஆட்சி எதை செய்யுமோ அதை  முற்றாக மறந்தனர் 80  வருடமாக அரசியலுக்கென்றே தங்களை தயார்செய்த பேரியக்கம்.
அதுதான் 30 வருட முபாரக்கின் சர்வாதிகார ஆட்சின் எச்சங்கள் நாட்டின் எல்லா துறைகளிலும் வியாபித்திருந்தார்கள். அவர்களை களை பிடுங்கும் அந்த வேலையை துப்பரவாக மறந்துபோனார்கள். இது தான் இவர்கள் செய்த மூன்றாவதும் மிக முக்கியமான தவறும் ஆகும்.
இதை செய்யாமல் விட்டதற்கான காரணங்கள் என்ன வென்று பாப்போம்.
இஸ்லாமிய வாதிகளின் ஒட்டு மொத்த ஆதரவோடு ஆட்சி பீடம் ஏறியவர்கள் எதிர் தரப்பின் அதிரடியால் அதிகார கதிரை ஆட்டம் காணுவதாக நினைத்து, இஸ்லாமிய எதிர்ப்பாளர்களோடு ஒன்றிப்போயிருந்தமை இஸ்லாமிய தரப்பின் ஆதங்கத்தை அதிகப்படுத்தியது என்பதை அரசியல் களம் மிகதெளிவாக இக்வானிய உயர்பீடத்திற்கு உணர்தியது.
எனவே தற்காலிகமாக அதிகாரத்தை தக்கவைத்தவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலின் வெற்றியே நிரந்தரமாக அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான முக்கிய சாதனம்.
இச்சந்தர்பத்தில் மதச்சார்பற்றவர்களையும், அவர்களின் ஊடக ஒழுங்கையும் பகைத்துக்கொள்ள இக்வானிய அரசுக்கு தைரியம்  இருக்கவில்லை. இந்த இக்வானிய இயலாமையில் முபாரக்கின் எச்சங்கள் பாதுகாககப்பட்டனர்.
எக்காரணங்கள் முபாரக்கின் எச்சங்களை பாதுகாத்ததோ அதே காரணம் சில முபாரக்கின் எச்சங்களை பதவி நீக்கவும் செய்தது. அதுதான் இக்வானிய அரசை பாதுகாத்தல்.
ஒரு புறம் இப்படி மதசார்பற்றவர்களுடனான நெருக்கத்தை அதிகரிக்க  இக்வானிய அரசு பெரிய பிரயத்தனங்களை செய்தாலும் முபாரக்கின் எச்சங்களும், மதச்சார்பற்றவர்களும் இக்வானை அனைக்க விரும்பவில்லை.(அவர்களின் கொள்கையில் அவர்கள் மிகச்சரியாக இருந்தார்கள்) மறு புறம் இக்வானிய இஸ்லாமிய விரோத செயற்பாடுகள்  இஸ்லாமிய வாதிகளை வெறுப்படைய வைத்தது .
இப்படி இருதரப்பினரின் ஆதரவும் குறைவதை உணர்ந்த இக்வானிய அரசு எதிர் வரும் நாடளுமன்ற தேர்தலின் வெற்றிக்கான யுக்திகளை கையாள தொடங்கினர்.
நான் மேலே குறிப்பிட்டது போன்று இக்வான்களின் வாக்கு பலமும் சலபிகளின் வாக்கு பலமும் அரசியல் அரங்கில் நிர்ணயிக்க பட்ட ஒன்றாக இருந்தது.
எனவே எதிர் வரும் நாடளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் எப்படியாவது இஸ்லாமிய கட்சிகளை பலவீனப்டுதியாகவேண்டிய தேவை இக்வானிய உயர் பீடத்திற்கு இருந்தது .
இக்வான்கள் தங்களின் தூரோக முகங்களை காட்டத்தொடங்கினர்.இஸ்லாமிய இயக்கங்களை பலவீனப்படுத்தும் அவர்களது வியூகங்களை நடை முறைபடுத்தும் படலங்களை ஆரம்பித்தனர்.
இஸ்லாமிய இயக்கங்களை பலவீனப்படுத்த இக்வானிய அரசு கையாண்ட யுக்திகள்.
அதிபர் தேர்தலுக்கு முன்னர் இக்வான்கள் தங்களை பாதுகாத்துகொள்ள இராணுவ தரப்பினருடன் சில ஒப்பந்தங்களை செய்துகொள்ள முற்பட்டனர் .
இதற்கு உதவியாக எகிப்திய சலபிகளின் அறிஞரும் ஸலாபியா தஃவா அமைப்பின் பிரதித் தலைவருமான யாசிர்  அல்புர்காமியைஉதவிக்கு அழைத்திருந்தனர்.
ஒப்பந்தத்தின் சுருக்கம் வருமாறு.
இஸ்லாமியவாதிகள் இந்த தேர்தலில் தோல்வியடைந்தால் இஸ்லாமிய (இக்வானிய ) தலைவர்களை கைது செய்வது தவிர்க்கப்படுதல் வேண்டும்.
அதேபோல் வெற்றி பெரும் பட்சத்தில் இராணுவ தளபதிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் வழக்குகள் இல்லாமல் அவரை பாதுகாப்பது.
(காரணம் இவர் முபாரக்கின் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் எல்லா அமைச்சர்கள் போன்று முறையற்ற பணம் சம்பாதித்தல் போன்ற பல வழக்குகள் இவருக்கு எதிராக தொடுப்பதற்கு சந்தர்பம் இருந்தது )
இந்த ஒப்பந்தின் பலனாகத்தான் தற்போதய இராணுவ தளபதி அப்துல் பத்தாஹ் ஷீஷீயை இக்வானிய அரசால் நியமிக்க முடியுமாக இருந்தது .
இந்த ஒப்பந்தில்  யாசிர் புர்காமி கலந்து கொண்டார் என்ற  செய்தியை ஆட்சிக்கு வந்த பின்னர் இக்வான்கள் கசியவிட்டனர் .
இது சலபிகளின் அந்நூர் கட்சிக்குள்ளும் சலபிய ஆதரவாளர்களுக்கு மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது (இக்வானிய ஆதரவாளர்களுக்கு இது பழகிப்போன விடயம் என்பதால் அவர்கள் இதை பெரிது படுத்தவில்லை ) இந்த நிகழ்வு அந்நூர் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியது .
அந்நூர் இரண்டு கட்சிகளாக உருவெடுத்தது இந்த யுக்தியில் இக்வான்கள் ஓரளவு வெற்றிபெற்றார்கள் என்றே சொல்லவேண்டும். இருந்தாலும் இக்வான்களின் அதிகார ஆசை அவர்களுக்கு இருந்த பயத்தை குறைக்கவில்லை.
அடுத்தடுத்து இவர்களின் இஸ்லாமிய கட்சிகளை ஒடுக்கும் படலம் தொடர்ந்தது.

சலபிய அறிஞர்கள் பள்ளிகளில் பிரச்சாரம் செய்வதை மறைமுகமாகவும் நேரடியாகவும்  தடை செய்தனர், உலக வங்கியில் கடன் பெரும் விடயத்திலும் ஷீயாக்களுடனான தொடர்புகளை அதிகரிக்கும் விடயத்திலும் ஒட்டு மொத்த உலமாக்களின் ஆலோசனைகளையும் அலட்சியம் செய்தார்கள். ஏன் இறை வசனக்களை கூட மறந்தார்கள் ,
மாபெரும் மக்கள் செல்வாகுடன் இருக்கும் மார்க்க அறிஞரும் அரசியல்வாதியுமான ஹாஷிம் ஸலாஹ் அபூஇஸ்மாயில்”  ஸலபிய சிந்தனை போக்குள்ளவர் என்பதற்காக எந்த ஒரு சந்தர்பத்திலும் அவரை ஆதரித்தது கிடையாது . (இறுதியாக நடந்த ஆர்பாட்டத்தில் இக்வானிய ஆதரவு அணியில்   கொல்லப்பட்ட (16) பேரும் இவருடைய  ஆதரவாளர்கள் என்பது குறிப்பிட தக்கது).
இப்படி நாளுக்கு நாள் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளை இக்வான்கள் அரங்கேற்றிகொண்டே இருந்தார்கள் .
அரசியல் இருப்புக்காக அவர்கள் வகுத்த வியுகம் அவர்களை அரசியல் பாதையை விட்டும் தூரமாக்குவதற்கான முன் ஏற்பாடு என்பதை அவர்கள் எதிபார்க்கவில்லை .
இஸ்லாமிய விரோதப்போக்கும்  ,முபாரக்கின் எச்சங்களை விட்டு வைத்ததும் இக்வானிய அரசியல் வரலாற்றில்  அழிக்கபடாத வடுக்கள்.
இந்த இரண்டு  நிகழ்வும் இக்வான்களை நாட்டு நலன் சம்மந்தமான நிர்வாக ஒழுங்கை  கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை விட்டும்  அவர்களை சற்று தூரமாக்கியிருந்தது .
நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளம் நோக்கி சென்றது. எகிப்திய வரலாற்றில் என்றுமில்லாதவாறு பணவீக்கம் ஏற்பட்டது. எகிப்தியர்கள் இதுவரை கண்டிராத புதிய புதிய பிரசினைகளை எதிர்நோக்கினார்கள்.
மின்சார தடை, ஏறி பொருள் தட்டுபாடு போன்ற விடயங்கள் எகிப்தியர்களை அதிருப்திக்குள்ளாக்கியது .
ஆனால் இக்வானிய அரசோ  இக்கட்டான இச்சூழ்நிலையை சமாளிக்க திணறியது.
இஸ்லாமிய கட்சிகளை  ஆதரவுக்கு அழைத்தால் இவர்களாகவே  அவர்களுக்கு மக்கள் செல்வாக்கை அதிகரிக்கச்செய்வதுபோல் ஆகிவிடும்.
மதச்சார்பற்றவர்களை அழைத்தால் அவர்களும் முன்வரப்போவதில்லை.  இறுக்கமான இச்சூழலில் இக்வானிய உயர் சபையோடு ஒன்றிப்போனது இக்வானிய திறமைகளும் 80 வருட அனுபவமும்.
இந்த அரசியல் அதிர்வுகள் முபாரக்கின்  எச்சங்களுக்கும், மதச்சார்பற்றவர்களுக்கும் ,கிரித்தவர்களுக்கும் பொதுமக்களை தம்பக்கம் திருப்ப சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.
இச்சந்தர்பத்தை பயன்படுத்திய இந்தக்கூட்டம் ஏற்கனவே தங்களுக்கு இருந்த ஆர்பாட்ட அனுபவங்களை அரங்கேற்றத்தொடங்கியது . அனுபவத்தாலும் மனித வளத்தாளும் தன்னிறைவு கொண்டுள்ளோம் என்று சொல்லும்  இக்வானிய இயக்கம் இதன் பாதிப்பை உணரத்தவரினர். சுட்டிக்காட்டப்பட்டும் ஏற்க மறுத்தனர்.
காரணம் பாதுகாப்பு பிரிவின் மீதும் தமது மதச்சார்பற்ற ,மற்றும் கிருத்துவ (அமெரிக்கா உட்பட )  தோழர்களை முற்று முழுதாக நம்பி இருந்தனர் .
இஸ்லாமிய எதிர்பாளர்களின் நடவடிக்களை சரியாக கணித்திருந்த இஸ்லாமிய கட்சியான அந்நூர் இந்த இக்வானிய அரசை வீழ்சியில் இருந்து பாதுகாக்க முடிமான முயற்சிகளை செய்தது.
அதில் மிக முக்கியமானது சமகால அரசியல் பதட்டத்தை தணிக்க அக்கட்சி  முன்வைத்த தீர்வுகள் .
(1) இக்வான்களால் நியமிக்கபட்ட தலைமை நீதியரசரை பனி நீக்கம் செய்து புதிய ஒருவரை நியமித்தல் .
(2) நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுதல் .
(3) அமைச்சரவையை கழைத்து அணைத்து தரப்பினரும் உள்வாங்கப்படும் அமைப்பில் புதிய அமைச்சரவையை நியமித்தல் .
இந்த தீர்வுப்பொதி தற்போதைய அரசியல் ஸ்தீரண தன்மைமைக்கு தற்காலிக முடிவாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த தீர்வுப்பொதியை போராட்டக்காரர்கள் உட்பட அணைத்து கட்சிகளும் வரவேற்றது.
ஆனால் இக்வானிய அரசு இந்த தீர்வை பரிசீலிப்பதற்குக்கூட முன்வரவில்லை காரணம் இத்தீர்வை நடைமுறை படுத்தினால் அந்நூர் கட்சியின் மக்கள் செல்வாக்கு உயர்வது யாராலும் தடுக்க முடியாது. இதை நடைமுறை படுத்துவது  இக்வான்கள் தங்களை தாங்களே அரசியல் ஆபத்தில் தள்ளுவதற்கு சமம் என்று கருதினர் .
எனவே நிபந்தனை இல்லா பேசுவார்த்தைக்கு எதிர் தரப்பை அழைத்து எரியும் நெருப்பில் என்னை ஊற்றியது முர்சி தலைமையிலான இக்வானிய அரசு .
அது போலவே எகிப்திய அரசியல் ஒழுங்கில் மிக முக்கியமான அரசியல் வாதியான அஷ்ஷெய்க்ஹாஷிம் சலாஹ் அபு இஸ்மாயிலும் ஒரு தீர்வை முன்வைதிருந்தார் இது பற்றி கூறுகையில்
இந்த அரசிற்கு மிகச்சிறந்த தீர்வுகளை நான் முன்வைத்திருந்தேன் ஆனால் இறுதிவரை எனக்கு பதிலளிக்கவில்லை.
இப்படி அணைத்து தரப்பையும் அலட்சியம் செய்த இக்வானிய அரசு இன்னுமொரு வரலாற்றியல் தவரையும் செய்தது.
( நான்காவது  காரணி )
அதுதான் போராட்டகார்கள் 2013\06\30 ம் திகதியை அரசுக்கான தங்களின் இறுதி கெடுவாக அறிவித்திருந்த வேளையில் ஜூன் 30ம் திகதிக்கு முன்னரே தனது ஆதரவாளர்களை வீதிக்கு இறக்கி தங்கள் மக்கள் செல்வாக்கை காட்டி எதிர் தரப்பை அடிபணிய வைக்கலாம் என்ற தவறான முடிவுக்கு சென்றது .
இதற்கிடையில் இராணுவம் இந்த பதட்ட நிலையை தவிர்க்க பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமாறு இருதரப்பையும் வேண்டிகொண்டது ,
இக்வான்கள் தங்களின் நிபந்தனையில்லா பேச்சு வார்த்தை என்ற முடிவில் உறுதியாக இருந்தததால் சுமுக தீர்வு என்பது விரும்பத்தகாத ஒரு நிகழ்வாகவே இரு தரப்பாலும் பார்க்கப்பட்டது .
இக்வான்கள் ஜூன் 30ம்  திகதிக்கு முன்னர் வீதிக்கு இறங்கியதும் இஸ்லாத்திற்கும் ,குப்ருக்குமான போராட்டமாக இதை காட்ட முனைந்ததும் ,எதிர் தரப்புக்கு சாதகமான ஒன்றாகவே அமைந்ததது.
ஒட்டு மொத்த இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள், இக்வானிய அரசின் மீது அதிர்ப்தி அடைந்த மக்கள் என்று எல்லா தரப்பினரையும் மிக இலகுவாக ஒன்று சேர்த்தார்கள்.
ஜூன் 30ம் நாள் இரவு  போராட்டகாரர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட ஒன்றரை கோடிக்கும் மேல் என்று மதச்சார்பற்ற ஊடகங்கள் வாசிக்க தொடங்கின. சுதந்திர  சதுக்கம் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்ததை இக்வானிய ஆதரவு ஊடகமான அல்ஜஸீராவே ஒளிபரப்பியது.
இந்த இரண்டு  தரப்பிற்கும் இடையில் நடந்த கலவரத்தில் கிட்டதட்ட 40 க்கும் மேட்பட்வர்கள் உயிரிழந்ததுடன் 600க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள் .
இறுதியில் இராணுவம் இந்நிலைமையை சீர்செய்ய அரசுக்கும் போராட்டகாரர்களுக்கும் இரண்டு நாள் அவகாசமளித்தது.
இந்த இரண்டு நாட்கள் இக்வானிய அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தர்பம் என்றே சொல்ல வேண்டும்  இச்சந்தர்பத்தை இக்வானிய அரசு சரியாக பயன் படுத்தி இருந்தால் இந்த ஆட்சி கவிழ்ப்பை முற்றாக தடுத்திருக்க முடியும் ,
ஆனால் இக்வானிய அரசு தவறுக்கு மேல் தவரையே செய்ய துணிந்தது. வீதிக்கு இறங்கவேண்டாம் அது நாட்டின் பிளவுக்கு வழிவகுக்கும்  ,சில விட்டு கொடுப்புகளை செய்து  நாட்டின் ஸ்தீரன தன்மைக்கு வலியமைக்குமாறு எகிப்தின் இஸ்லாமிய கட்சிகளால் முன்வைக்கபட்ட கோரிக்கைகளை  தொடந்தும் மறுத்தே வந்தது ,
நிலைமை உக்கிரமடைவதை  உணர்ந்த சலபிகளின் அந்நூர் கட்சி அரசுக்கு மீண்டும் ஒரு தீர்வை முனவைதது .
அது பினவருமாறு
தற்போதய நிலைமையில் அமைச்சரவை மாற்றம், பாராளுமன்ற தேத்தல் நடத்தும் வாக்குறுதி போன்றவை எதிர்பார்பாட்டகார்களை அமைதியாக்காது காரணம் போராடட்டக்கரர்களின் ஒரே கோரிக்கை ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதாகவே உள்ளது.
எனவே அதை தணிப்பதற்காக முன்கூட்டியே  ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பது தான் மிகச்சிறந்தது. இதில் மூன்று விதமான நன்மைகள் உள்ளதாக அந்நூர்கட்சி சுட்டிக்காட்டியது .
(1) இஸ்லாமிய அடிப்படையை பொதிந்துள்ள யாப்பை பாதுகாத்தல்.
(2) உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டு இரத்தம் சிந்துவதில் இருந்து நாட்டு மக்களை பாதுக்கத்தல்.
(3)தேர்தல் நடக்கும் காலம் வரை முர்சியே ஜனாதிபதியாக நீடித்தல்
இந்த திட்டத்தை பெரும்பான்மையான இஸ்லாமிய கட்சிகள் வரவேற்றனர்.
ஒரு புறம் வன்முறை அதிகரித்து கொண்டே சென்றது மறுபுறம் அரசின் அமைதியும் நீடித்தது.
இச்சந்தர்பத்தில் இரண்டு தீர்வுகளை முன்வைத்து இராணுவமும் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியது.
ஒன்று:
ஜனாதிபதி தேர்தல் நடத்துதல் அல்லது அதிபர் பதவியில் நீடிப்பதா இல்லையா என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துததல்.
இதை அடுத்து  மக்களுக்கு ஜனாதிபதி உரை நிகழ்த்துவார் என்று அரசு ஊடகங்கள் அறிவித்தன நாட்டின் அணைந்து தரப்பும் ஜனாதிபதி சிறந்ததொரு தீர்வை முனவைப்பார் என்று கருதி இருந்த வேளையில்   .
தனது உரையில் அந்நூர் கட்சி முதலாவதாக முன்வைத்த மூன்று தீர்வுகையும் முன்வைத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு எதிப்பார்பாட்டகாரர்களுக்கு அழைப்பு விடுத்தார் .இராணுவம் தங்களது இரண்டு நாள் அவகாசத்தை திரும்பப்பெறவேண்டும் என்று எச்சரித்தார் . இதை ஐந்தாவது கரணமாக கருதமுடியும்.
இந்த உரை இஸ்லாமிய வாதிகளிடம் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தியது காரணம் ஜனாதிபதிபதி தனது முழுமையான கட்டுப்பாட்டில்  நாட்டை வைத்துள்ளார்  எனவே  விரும்பத்தகாத விளைவுகளை நாம் எதிர்நோக்கமாட்டோம் என்ற ஒரு மன ஆறுதலை அவர்களுக்கு கொடுத்தது.
மறுபுறம் ஆர்பாட்டகரர்களின் கோபத்தையும் அதிகப்படுத்தியது இந்த அரசியல் நிகழ்வுகளில் அமைதிகாத்த தரப்பை கூட ஆர்பாட்டக்கார்ரர்களில் அணியில் இணைய இந்த  உரை வழியமைத்து
.
உண்மையிலேயே இந்த உரை இந்த சூழ்நிலைக்கு பொறுத்தமற்றதாகவே இஸ்லாமிய அரசியல் ஆய்வாளர்கள் கூட கருதினர் தீர்வை முன்வைத்த கட்சியே தனது தீர்வு தட்போதய சூழ்நிலைக்கு பொருத்தமற்றது என்று மாற்று தீர்வை முன்வைதிருக்க, அனைவரையும் அலட்சியப்படுத்துவது போல் அர்த்தமற்ற தீர்வை பொருத்தமற்ற நேரத்தில் முன்வைத்ததானது இக்வானிய அரசு மயக்கத்தில் இருதாகவே கருத முடிகிறது .
இராணுவம் அறிவித்ததுபோல்  அவகாச முடிவான இரண்டாம் நாள் நாட்டின் நலன் கருதி காத்திரமான ஒரு முடிவெடுப்பதற்காக இக்வான்களின் அரசியல் கட்சி உட்பட  அணைத்து அரசியல் ஆன்மீக சக்திகளுக்கும் இராணுவம் அழைப்பு விடுத்ததது .
இக்வான்களை தவிர  ஏனைய அனைத்து தரப்பும் கலந்து கொண்ட நிலையில் இராணுவ தலைமையில் சில முடுவுகள் எடுக்கப்பட்டது .
நாட்டின் நலன் கருதி ஜனாதிபதியை நீக்கி இடைக்கால அரசை மதச்சார்பற்றவகளின் தலைவரான  முஹம்மத் அல் பராதேயி தலைமையில் அமைதல்.
நாட்டில் தற்போதைய அரசியல் யாப்பை நிரந்தரமாக தடை செய்தல் .
இந்த முடிவுக்கு சலபிகளின் அந்நூர்கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
ஜனாதி பதிக்கு மீண்டுமொரு சந்தர்பம் வழங்க கோரியது ஆனால் இராணுவ தரப்பால் தகுந்த காரணத்துடன் இந்த கோரிக்கை மறுக்கப்பட்டது.
ஜனாதுபதிக்கும் பாதுகாப்பு பிரிவுக்கும் மத்தியில் இடம்பெற்ற இறுதிக்கூட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலை மிக குறுகிய காலத்தில் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டும் அதிபர் தனது உரையில் அதற்கு மாற்றமான நிலையை வெளிபடுதியமை, தனது புதிய நிலைப்பாடு பற்றி  இராணுவத்திற்கு அறிவிக்காமை . தற்போதைய இந்த கூட்டத்தை புறக்கணித்தமை போன்ற சில காரணங்களுடன்  நாட்டின் தற்போதைய பதற்றநிலையை தணிப்பதற்காக இருந்தால்  ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்து குறுகிய காலத்தில் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலை நடத்துவதுவதே சிறந்ததாகும்  என்ற இந்த முடிவையே கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின்  இறுதி முடிவாக இருந்தது.
அந்நூர் கட்சியிமன் அடுத்த இரண்டு கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு
மதச்சார்பற்றவர்களின்  தலைவருக்குபதிலாக நாட்டின் உயர்நீதி மன்ற நீதிபதியை இடைக்கால ஜனாதிபதியாக நியமித்து.
நடைமுறையிலுள்ள யாப்பினை தற்காலிகமாக தடை செய்து சூரா சபையிடம் ஒப்படைத்தல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது .
இது சம்மந்தமாக அந்நூர் கட்சி தனது அறிக்கையில் இரண்டு ஆபத்தான நிலைகளில் குறைந்த ஆப்பத்தை தெரிவு செய்தல் என்ற இஸ்லாமிய விதிக்கமையவே இந்த தீர்வை ஏற்றுகொண்டுள்ளதாகவும். தற்போதய இந்த தீர்வை மிக மனவேதனையுடனேயே ஏற்பதாகவும் அறிவித்தனர். இந்த கூட்டத்தில் அந்நூர் கட்சி கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இராணுவத்தின் ஆரம்பே முடிவே இறுதி முடிவாகவும் இருந்திருக்கும்.
அது தற்போதைய நிலயை விடவும் மிக மோசமான விளைவுகளை நோக்கி நாட்டை நகர்த்தி இருக்கும் .
இந்த முடிவுகள் இஸ்லாமியவாதிகளை திருப்தி படுத்தவில்லை என்பது உண்மை.  இக்வான்களும் அவர்களின் அரசியல் அறியாமையும் ,ஆட்சி மோகமுமே இதற்க்கு முற்று முழு காரணம் என்பதில் சந்தேகம் இல்லை .
தனது இயலாமையை மறைபதற்கு அடுத்தவர்களை குறை கூறும் அர்த்தமற்ற செயல்களை தவிர்த்து தங்கள் சார்பான பிழைகளை ஏற்றுஅதை  சிறந்த படிப்பினையாக மாற்றி , இஸ்லாமிய விழுமியங்களை மதித்து குர்ஆன் சுன்னாவின் வழியில் தனது பாதையை இக்வானுல் முஸ்லிமீன் அமைக்குமாக இருந்தால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் இக்வான்கள் எழுந்து நிற்கலாம் .
அம்ஜத் ஷஹீத் (அஸ்ஹரி)

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger