கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டப்ளியூ.எம்.டி.பி. வராவெவ, ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் முதலமைச்சர் வேட்பாளராக மத்திய மாகாணத்தில் போட்டியிட உள்ளார் என்று, நம்பிக்கைக்குரிய வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக் கொடி வழக்கின், மூன்று போர் கொண்ட நீதிபதிகள் குழுவில், இடம்பெற்றிருந்த வராவெவ, அந்த வழக்கில், சரத் பொன்சேகா நிரபராதி என்று தீர்ப்பு வழங்கியிருந்தார்.
ஏனைய இரு நீதிபதிகள் சரத் பொன்சேகாவை குற்றவாளி என தீர்மானித்து, அவருக்கு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்திருந்தனர்.
எனினும் வராவெவ, வழங்கிய பக்கசார்பற்ற தீர்ப்பு காரணமாக, அவர், ராஜபக்ஸ அரசாங்கத்தின் கடும் கோபத்திற்கு உள்ளதுடன், நியாயத்தை மதிக்கும் குணம் காரணமாக மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதாக எதிர்க்கட்சி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், முன்னாள் நீதிபதி வராவெவ, மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் முதன்மை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment