மஹிந்த சிந்தனை நடைமுறைப்படுத்தப்பட்ட காலப் பகுதியிலிருந்து நாட்டு மக்களின் குடும்ப வருமானம் பாரியளவில் குறைவடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரிசி, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்கள் மீதான வரி அதிகரித்துள்ளமையின் காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் பெருதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் அத்தியாவசிய பொருட்கள் மீதான வரித் தொகை 39 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அரசாங்கம் பொது மக்கள் மீதான வரித்தொகை பாரிய அளவில் அதிகரித்து வருவதாக ஹர்ச டி சில்வா குற்றஞ்சாட்டினார்.

Post a Comment