போலிப்பிரச்சாரங்களை விடுத்து இராணுவக் குறைப்பினை ஏற்றுக்கொள்ளுங்கள் - கோத்தாபாய கோரிக்கை!


43ஆயிரம் படைவீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்த வடக்கில் தற்போது 13ஆயிரத்து 200 படைவீரர்களே கடமையில் உள்ளனர். போலிப்பிரச்சாரங்களை விடுத்து இராணுவக் குறைப்பினை ஏற்றுக்கொள்ளுங்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கில் தற்போது இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களில் புறச் சக்திகள் தலையீடு செய்வதற்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது. அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித், காணி சுவீகரிப்பு மற்றும் படையினர் நிலைநிறுத்தம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தத் தகவல்களில் உண்மைகள் எதுவும் இல்லை. வடக்கில் பலாலி, காங்கேசன்துறை பகுதிகளில் காணி சுவீகரிப்பு தொடர்பில் இந்தியா கேள்வி எழுப்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டில் யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களை அரசாங்கமே நிர்ணயிக்கும் எனவும், அதனை வேறு தரப்பினர் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் 2007ஆம் 2008ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் 43ஆயிரம் படைவீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்ததாகவும், தற்போது 13ஆயிரத்து 200 படைவீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்திய இலங்கை மீனவர்களின் அத்து மீறல்கள் தொடர்பில் இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger