'இலங்கையில் பௌத்தர்களால் ஏனையோர் மத சுதந்திரம் பாதிப்பு'




இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பௌத்தர்களால் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், முஸ்லிம்களுக்கு எதிராக சில பௌத்தர்கள் சகிப்புத் தன்மையற்று செயற்படுவதாகவும் அமெரிக்க அரசுத்துறையின் 2012ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கை கூறியுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது கடுமையான தாக்குதல்களை பௌத்தர்கள் நடத்துவதாகவும், அவர்கள் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுவதாகவும் அது குறிப்பிடுகிறது. இத்தகைய செயற்பாடானது அங்கு ஒருவிதமான சமூக பதற்றத்துக்கு வழி செய்வதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராகவும் சில பௌத்தர்கள் மத்தியில் சகிப்பின்மையும், பக்கசார்பும் வளர்ந்துவருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்திய நிலைமை
இந்தியாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ நிர்வாகத்தில் உள்ள பல கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் சிறுமிகள் தலை அங்கி அணிவது தடுக்கப்படுவதாக அது குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 560 வரையிலான சமூக வன்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 89 பேர் கொல்லப்பட்டு 1846 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger