அதிவேக நெடுஞ்சாலையில் எரிபொருள் நிலையங்கள்!

 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபென்ன வெளியேறும் நிலையத்திற்கு அருகாமையில் இரண்டு எரிபொருள் நிலையங்கள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு இரண்டு காணித்துண்டுகளை இரு வேறு நிறுவனங்களுக்கு 30 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்க துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 44 கிலோ மீற்றர் தொலைவில் இரண்டு பக்கத்திலும் உள்ள காணித்துண்டுகளே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக தெரிகின்றது.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்கும் பொருட்டே இந்நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger