கிண்ணியாவில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது




கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்த ஒருவர் சீனக்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து சுமார் 9 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா கலந்த லேகியத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கிண்ணியா ஹிஜ்ரா வீதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்கள் வழங்கிய தகவலை அடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுட்ட சீனக்குடாப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு ப் பிரிவு உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.எம். ஜவ்சி தலைமையிலான பொலிஸ் குழுவினரே இதனைக் கைப்பற்றியுள்ளனர்.
சீனக்குடாப் பொலிஸ் நிலையத்தினால் கைப்பற்றப்பட்ட அதிக கூடிய போதைப் பொருள் இது என பொலிசார் தெரிவித்தனர்.
மூதூரிலிருந்தே லேகியம் கொண்டு வரப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டவரின் தந்தையும் இதே தொழிலையே முன்னர் செய்து வந்ததுடன் மூன்று தடவைகள் அவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger