ஓடுபாதையில் இருந்து விலகி நேபாள விமானம் ஆற்றில் இறங்கியது / விமானம் கடலுக்குள் பாய்ந்து விபத்து: பயிற்சி பெறாத விமானியே காரணம் எனத் தகவல்


 

016ஓடுபாதையில் இருந்து விலகி நேபாள விமானம் ஆற்றில் இறங்கியது: விமானிகள் உள்பட 9 பேர் காயம்
நேபாள நாட்டில் பசுமைமிக்க மலைகள் சூழ்ந்த ஏராளமான சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக அன்னபூர்னா பகுதியில் மலை ஏறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் அங்கு வெளிநாட்டு பயணிகள் குவிகிறார்கள்.
இந்நிலையில் நேபாள நாட்டிலுள்ள சுற்றுலா தலமான பொக்காரா என்ற இடத்திலிருந்து நேபாள ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 3 விமானிகள், 8 ஜப்பான் நாட்டினர் உள்பட 21 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம் காலை 8.30 மணி அளவில் ஜோம்சோம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானம் எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று அருகேயுள்ள காளி-கண்டகி ஆற்றில் இறங்கியது.
இந்த விபத்தில் விமானிகள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக தப்பினர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 6 பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள்.
விமானம் கடலுக்குள் பாய்ந்து விபத்து: பயிற்சி பெறாத விமானியே காரணம் எனத் தகவல்
இந்தோனேசியாவின் தலைநகரான பாலியில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தரையிறங்கிய லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகி அருகில் இருந்த கடலுக்குள் பாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 101 பயணிகளும், 7 விமான ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களுள் நான்கு பயணிகள் படுகாயம் அடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
விபத்துக்குள்ளான போயிங் 737-800 விமானம் கடந்த பிப்ரவரி மாதம் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதம்தான் பயன்பாட்டுக்கு வந்தது. 142 மணி நேரமே பறந்துள்ள சமயத்தில் கோளாறு காரணமாக விபத்து நடந்ததா? எனக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், விமானம் தரையிறங்குவதற்கு சற்றுமுன் வரை 24 வயதுடைய துணை விமானியே விமானத்தை ஓட்டியதாகவும், அவரால் விமான ஓடுபாதையை சரிவர கணிக்க இயலாமல் 150 அடி உயரத்தில் இருக்கும்போது விமானத்தை இயக்கும் பொறுப்பை விமானியிடம் கொடுத்ததாகவும் தெரியவந்ததுள்ளது. 1200 மணி நேரமே வானில் பறந்து அனுபவம் பெற்ற துணை விமானியே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இதுபோன்ற அவசர சமயங்களில் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி வலியுறுத்தி உள்ளது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger