அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது / ஆபிரிக்க நாடுகள் தொடர்பில் கவனம் / அடிப்படை வசதிகளே இல்லாத பொருகாமம் கிராமம்


 

691nudeஅரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது
பாப்பரசர் போன்று வேடமணிந்து அலங்கோலமாக நடந்து கொண்ட பல்கலைக்கழக மாணவியொருவரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் கார்னீஸ் மெலோன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த மாணவி, கடந்த மாதம் பாப்பரசர் போன்று கிரீடம் அணிந்து கொண்டு இடுப்பு கீழ் ஆடையணியாமல் காணப்பட்டார். அத்துடன் சிகரெட்டும் புகைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு ஆணுறைகளை விநியோகித்துக் கொண்டிருந்தார்.
இது தொடர்பாக பிட்ஸ்பர்க் மறைமாவட்டத்தின் கத்தோலிக்க ஆயர் ஒருவர் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து 19 வயதான மேற்படி மாணவியை பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
பொது இடத்தில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகள் தொடர்பில் கவனம்-
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில், ஆபிரிக்க நாடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தினால் இலங்கைக்கு பல அனுகூலங்கள் கிடைக்கப்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உகண்டா விஜயத்தின் போது, அந்த நாட்டு ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் இது மேலும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அடிப்படை வசதிகளே இல்லாத பொருகாமம் கிராமம்-
அடிப்படை வசதி என்பது மனிதனுக்கு இன்றியமையாத அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகும்.
கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தில் தமது அனைத்து உடமைகளையும் இழந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட போதிலும் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பது கேள்விக்குரியாகும்.
பொருகாமம் இது மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்திலுள்ள மீள்குடியேற்ற கிராமமாகும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த இந்த மக்கள் குடியேற்றப்பட்ட போதிலும் இந்த கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதியும் அற்ற நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள இந்த கிராமத்தில் சுமார் 190 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger