'பசிக் கொடுமையை ஒழிக்க பூச்சி உற்பத்தியை பெருக்கலாம்'



உணவுக்காக பயன்படுத்தப்படும் பூச்சிகள்
உணவுக்காக பயன்படுத்தப்படும் பூச்சிகள்
உலகளவில் பசிக் கொடுமையை ஒழிப்பதில் எதிர்காலத்தில் மனிதர்களால் உட்கொள்ளக் கூடிய பூச்சிகள் ஆற்றக் கூடிய பங்களிப்பை ஐ நா அறிக்கை ஒன்று முன்னிலைப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 200 கோடி மக்கள் தமது உணவில் வெட்டிக் கிளி, வண்டு, எறும்பு உள்ளிட்ட பூச்சிகளை சேர்த்துக் கொள்வதாக ஐ நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறியுள்ளது.
பெரிய அளவில் பண்ணைகள் வைத்து தொழில் முறையில் பூச்சிகளை உற்பத்தி செய்வது வருங்காலத்தில் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை அளிக்கும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வேகமாக இனப் பெருக்கம் செய்யும் தன்மை கொண்ட பூச்சிகளிடம், புரதச் சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் மற்றும் கால்நடைகளின் உணவாகவும் இவை பயன்படும் வாய்ப்புள்ளது.
அதேநேரம் பூச்சியை சாப்பிடுவதா என்று மேற்கத்திய நாடுகளில் நுகர்வோரிடம் காணப்படும் அருவருப்பு, பூச்சிகள் அதிகம் உணவுக்காக பயன்படுத்தப்படுவதை தடுக்கலாம் என்றும் ஐ நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சீனா, தென்-கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் பூச்சிகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளில் சில ஓட்டல்களில் இவை அபூர்வப் பொருளாக பரிமாறப்படுகின்றன.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger