அலரி விதைகளை உட்கொண்டு தாய் தற்கொலை; பிள்ளை சிகிச்சை -பள்ளிச்சேனையில் சம்பவம் / மகனுடன் தந்தை கிணற்றில் விழுந்து பலி


 


அலரி விதைகளை உட்கொண்டு தாய் தற்கொலை; பிள்ளை சிகிச்சை -பள்ளிச்சேனையில் சம்பவம்-
குடும்பத்தகராறு காரணமாக இளம் தாய் ஒருவர் அலரி விதைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பள்ளிச்சேனை பகுதியைச் சேர்ந்த யோகநாதன் ஜோஜினி மேரி (வயது 21) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
குறித்த பெண்ணின் கணவன் யாழ்ப்பாணத்தில் மேசன் வேலை செய்து வருபவராவார். விடுமுறையில் வீட்டுக்கு வந்த கணவன் மீண்டும் வேலைக்காக யாழ்ப்பாணம் செல்ல புறப்பட்ட போது கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ஆத்திரமடைந்த பெண் தனது பிள்ளைக்கும் அலரி விதைகளை பருக விட்டு தானும் உட்கொண்டுள்ளார்.
மகனுடன் தந்தை கிணற்றில் விழுந்து பலி
தந்தையும் மகனும் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் ஒன்று திஸ்ஸமராகமவில் இடம்பெற்றுள்ளது. 50 வயதான தந்தையே தனது 5 வயதான மகனுடன் கிணற்றில் விழுந்து பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை தனது 5 வயது மகனை இழுத்துக் கொண்டு கிணற்றில் பாய்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger