ஷார்ஜாவில் அனுமதியின்றி தங்கியிருந்த 170 பேர் கைது / ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேலுக்காக உளவு வேலை செய்த 2 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்


 

ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேலுக்காக உளவு வேலை செய்த 2 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்-
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்காக உளவு பார்த்ததற்காக மரண் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரை ஈரான் அரசு நேற்று தூக்கிலிட்டு கொன்றது.
இவர்களில் முஹம்மது ஹைதரி என்பவர் ஈரான் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு தகவல்களை இஸ்ரேல் மொசாட் படையினரிடம் விற்பதற்காக பணம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டவர்.
மற்றொருவரான கரோஸ் அஹமதி ஈரானி்ன் அணுஉலைகள் தொடர்பான ரகசியத்தை அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ.வுக்கு பரிமாறியதற்காக கைது செய்யப்பட்டவர்.
இவர்கள் இருவரும் நேற்று தூக்கிலிடப்பட்டதாக டெஹ்ரான் கோர்ட்டின் அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
ஷார்ஜாவில் அனுமதியின்றி தங்கியிருந்த 170 பேர் கைது-அபுதாபி, ஷார்ஜாவில் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகங்கள் உத்தரவிட்டிருந்தன.
இதனையடுத்து, ஷார்ஜா நகராட்சி மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நடத்திய அதிரடி சோதனையில் 170 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 100 பேர் உரிய ஆவணங்களின்றி ஷார்ஜாவில் தங்கி தெரு வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
53 பேர் வெளிநாட்டினருக்கான குடியுரிமை சட்டத்தை மீறியவர்கள். 17 பேர் சட்டபுறம்பான வகையில் கூலி தொழிலாளிகளாக வேலை செய்தவர்கள்.
மேற்கண்ட 170 பேரையும் கைது செய்த போலீசார், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
இதைப்போன்ற தேடுதல் நடவடிக்கை மேலும் தொடரும் என ஷார்ஜாவின் வெளியுறவு துறை தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger