13 ஐ ஒழிக்க ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் : குணதாச அமரசேகர



சட்டதிருத்தங்களை மேற்கொள்ளக் கூடிய அதிகாரம் பாராளுமன்றத்திற்கே காணப்படுகின்றது. எனவே பிரிவினைவாத சக்திகளின் எதிர்ப்புகளுக்கு அடி பணியாது ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தை முழு அளவில் பயன்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

சௌசிறிபாயவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும். இது நீதிக்கு விரோதமானது. அதனை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமுள்ள பாராளுமன்றத்தினால் தான் முடியும். அப்போது தான் நாம் அதற்கு உடன்படுவோம்.

இல்லையேல் அதில் அடங்கியுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அதிலுள்ள நான்கு சரத்துக்களையும் நீக்கிவிட்டு அதனை நடைமுறைப்படுத்தலாம்.

அவ்வாறல்லாது வடமாகாண சபை தேர்தல் இடம்பெற்று 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமானால் அது ஈழம் அமைய சந்தர்ப்பமாக அமையும் என்பதுடன் நாடு இரண்டாகப் பிரியும் வடகிழக்கில் ஏகாதிபத்திய ஆட்சி உருவாகும்.

இதனை தமிழர்களோ அல்லது தமிழ்நாடோ விரும்புவதைவிட ஏகாதிபத்திய வாதியான அமெரிக்காவே விரும்புகின்றது.

எனவே 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்காது வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger