நோர்வே நாடு அதன் சுதந்திர தினத்தை நாளை கொண்டாடுகின்றது. ஆனாலும் அங்கு குடியேறி வாழ்கின்ற அந்நிய நாடுகளைச் சேர்ந்த 13200 க்கும் அதிகமான சிறுவர்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது பெற்றோரிடமிருந்து திட்டமிட்டு பிரிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்.
நோர்வேயின் சுநத்திர தினத்தில் அங்கு வாழ்கின்ற வெளிநாட்டுப் பெற்றோர் தமது பிள்ளைகளுடன் சுதந்திரதினத்தை அனுஷ்டிக்க முடியாதவர்களாக உள்ளனர்.
நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதான சிறுவர் கடத்தல்களுக்கு எதிராக தற்போது நோர்வேயின் பல்வேறு ஊடகங்கள் தமது விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றன.

அதுமாத்திரமன்றி சிறுவர் காப்பகம் அந்நாட்டு அரசாங்கம் பாதுகாப்புப்பிரிவு ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கு எதிராக நோர்வே பிரஜைகளும் தமது அதிருப்திகளை வெளியிட்டுவருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாகக் கூட நோர்வேயில் அந்நாட்டு சிறுவர் காப்பகங்களுக்குஎதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
2000 க்கும் அதிகமானோர் இதில் கலந்து கொண்டு நோர்வே சிறுவர்காப்பகங்களுக்கு எதிராக செயற்பட்டுள்ளனர். அங்கு பெற்றோரிடமிருந்து விரிந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிறுவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
சிறுவர்களின் விருப்பு வெறுபுக்களைப் புரிந்து கொள்ளாத நோர்வே சிறுவர்காப்பகங்கள் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களையும் உதாசீனப்படுத்தி செயற்பட்டு வருகின்றனர்.
பால் மணம் மாறாத குழந்தைகள் முதல் விபரமறிந்த சிறுவர்கள் வரை விரைவில் சுமார் 13200 க்கும் அதிகமானோர் தமது பெற்றோரிடத்தில் சேர்வதற்கான ஆசையும் ஆவலும் இருக்கின்ற நிலையில் அவர்கள் அனைவரும் பலவந்தமாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நோர்வேயின் சிறவர் காப்பக நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகளின் அனுசரனணயில் சர்தேச கண்காணிப்பாளர்கள் குழு ஒன்றினால் கண்காணித்து விபரம் அறியப்படவேண்டும். என்பதுடன் நேரடியாக சிறுவர்களின் விருப்புகளையும் வெறுப்புகளையும் கேட்டறிந்து அதனை நிறைவேற்றுமாறும் ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
நோர்வே நாடு சுதந்திர தினத்தைச் கொண்டாடுகின்றபோதிலும் இங்கு நாம் அடக்குமுறைகளுக்கு கீழ் தமது பிள்ளைகள் சிறைப்பட்டுக் கிடப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவித்துள்ளனர். நோர்வே சிறுவர் காப்பங்களின் இந்த மெத்தனப் போக்கு நடவடிக்கை மற்றும் நீதிமன்றக்கட்டளையை மதிக்காத தன்மை ஆகியவற்றுக்கு விரைவில் பதில் கூறவேண்டிய ஒரு நிலை விரைவில் உருவாகும். என்பது நிச்சயமாகும்.
நோர்வேயில் வதியும் வெளிநாட்டுப் பெற்றோரின் நிலைப்பாடானது தமது பிள்ளைகளுடன் தாம் சுதந்திரமாக வாழவும் அவர்களின் விருப்பங்களுக்கேற்ப தம்தம் கலாசார நெறிகளுக்கு ஏற்ப தமது பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கும் நோர்வே அரசாங்கம் தமக்கு பழியிட வேண்டும் என்பதேயாகும். இந்த நிலைமை இன்னும் நீடித்துக்கொண்டிருக்குமானால் நோர்வேயில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே மாறிவிடுவர்.
அதுமாத்திரமன்றி இதன் பின்விளைவுகளையும் நோர்வேயின் அரசாங்கமும் அதிகாரத்தின் அமர்வுகளும் எதிர்கொள்ள வேண்டிவருவது நிச்சயம் ஆகும்.
எனவே சிறுவர் காப்பகங்கள் தாமதிக்காது ஆக்கபூர்வ பெற்றோரையும் பிள்ளைகளையும் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெற்றோர் கேட்டு நின்கின்றனர்.
Post a Comment