மாத்தளை மனித புதைகுழி குறித்து உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜே.வி.பி!


News Service
மாத்தளை மனித புதைகுழி குறித்து ஜே.வி.பி கட்சி உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. 1987-1989ம் ஆண்டுகளில் மாத்தளையில் காணாமல் போனவர்களின் குடும்ப உறவினர்களிடமும் சாட்சியங்கள் திரைப்பட உள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 87-89ம் ஆண்டுகளுக்கு உரியவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, மனித எச்சங்கள் ஜே.வி.பி உறுப்பினர்களினதாகவே இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் காணாமல் போன தமது கட்சி உறுப்பினர்களின் உறவினர்களிடம் தகவல்களை திரட்டுவதன் மூலம் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விசாரணைகளை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சுயமாக உள்ளக விசாரணைகளின் மூலம் உண்மையை வெளிப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger