பிரித்தானியா ஓல்ட்ஹாமில் தாக்குதல்- வீடியோ!



 குழந்தையை சேற்றில் புதைத்து கொலை செய்த தாயும் பாட்டியும் கைது / இவ்வருட முதல் 3மாத வீதி விபத்துக்களில் 498பேர் உயிரிழப்பு

Print Friendly
child-02உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை சேற்றில் புதைத்து கொலை செய்த தாயும் பாட்டியும் கைது-
தூங்­கிக்­ கொண்­டி­ருந்த தனது ஒரு வயதுக் குழந்­தையை அரு­கி­லுள்ள சேற்­றுக்­கு­ழிக்குள் போட்டுக் கொலை செய்­தது தொடர்­பாக குழந்­தையின் தாயையும் பாட்­டி­யையும் இம்­மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்­கும்­படி நீர்­கொ­ழும்பு மஜிஸ்­திரேட் நீதவான் ஏ.எம்.என்.பி. சம­ர­சிங்க உத்தரவிட்டுள்ளார்.
ஜா- எல இதி­மிட்­டிய தீப­சிகா கிரா­மத்தைச் சேர்ந்த 22 மற்றும் 42 வய­தா­ன­ இரு பெண்க­ளே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்கப்பட்­ட­வர்­க­ளாவர்.
இக் குழந்­தையை தூங்­கிய நிலையிலேயே வீட்டில் விட்டுவிட்டு அரு­கி­லுள்ள வீடொன்றுக்குச் சென்று திரும்பி வந்த போது குழந்தையைக் காண­வில்லை என தாய் கந்­தான பொலிஸ் நிலையத்தில் முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.
பொலிசார் மேற்­கொண்ட விசா­ர­ணையில் குழந்­தையின் தாயும் பாட்­டி­யுமே குழந்­தையை கொலை செய்ததாக தெரிய வந்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வருட முதல் 3மாத வீதி விபத்துக்களில் 498பேர் உயிரிழப்பு-
இவ்வருடத்தில் முதல் 3 மாதங்களில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தில் முதல் 3 மாதங்களில் 470 வீதி விபத்துக்களினால் கிட்டத்தட்ட 498 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மார்ச்வரை மொத்தமாக 2,218 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஆட்டோ மற்றும்; மோட்டார் சைக்கிள் விபத்துக்களினாலேயே அதிகளவான உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளது. அதிகளவான பாதசாரிகளும் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர். மேலும், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியிலேயே அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
வீதி ஒழுங்குகள் மற்றும் வீதிச் சமிக்ஞைகளை கவனியாமை, மதுபோதையில் வாகனங்களை செலுத்துதல், களைப்பு, அலட்சியம் ஆகியவையே இந்த விபத்துக்களுக்கான காரணங்களாக உள்ளன. பாதசாரிக் கடவையை பயன்படுத்தாத பாதசாரிகள் வேகமாக வரும் வாகன விபத்துக்களுக்கு இலகுவாக உள்ளாகி விடுகின்றனர்.
கடந்த வருடம் வீதி விபத்துக்களினால் 1,500 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல விழிப்புணர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், ஒவ்வொரு வருடமும் குறிப்பாக வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியா ஓல்ட்ஹாமில் தாக்குதல்- வீடியோ!
பிரித்தானியாவில் ஓல்ட்ஹாமில் ஒரு கடை தொழிலாளி மீது ஆயுதம் கத்திகள் வாள் கொண்டு மூன்று முகமூடி மனிதர்கள் பாரிய தாக்குதல்–


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger