பங்களாதேஷின் புதிய ஜனாதிபதியாக அப்துல் ஹமீத் இன்று (22) போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
ஆளும் கட்சியான அவாமி லீக் சார்பில் பாராளுமன்ற சபாநாயகராக பொறுப்பு வகித்து வந்த அப்துல் ஹமீத், தற்போது வங்காள தேச ஜனாதிபதியாகி உள்ளார்.
பங்களாதேஷின் 20-வது ஜனாதிபதியாக அப்துல் ஹமீத் (69) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் கமிஷனர் காசி ரகீபுதீன் அஹமத் இன்று அறிவித்தார்.
54 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட அப்துல் ஹமீத், கடந்த மாதம் 14ம் திகதி முன்னாள் ஜனாதிபதி ஜில்லுர் ரகுமான சிங்கப்பூர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது முதல் அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி இறந்த 90 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற வங்காளதேச அரசியலமைப்பு சட்டத்திற்கிணங்க அப்துல் ஹமீத் இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்
.
Post a Comment