தொழிலாளர் தினத்தன்று ஜப்பான் பிரதிப் பிரதமர் இலங்கை வருகிறார்



ஜப்பானின் பிரதிப் பிரதமர் டரோ அசோ மற்றும் பாராளுமன்ற சிரேஷ்ட உப நிதி அமைச்சர் யுக்கோ ஒபுச்சி ஆகியோர் மே முதலாம் திகதி இலங்கை வரவுள்ளனர். 

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். 

கொழும்பு டொக்யார்ட்டின் 20 வது வருட நிறைவை முன்னிட்டு அதனை பார்வையிடுவதற்காக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர்கள் இலங்கை வரவுள்ளனர். 

ஜப்பான் அரசாங்கம் கொழும்பு டொக் யார்ட்டின் விஸ்தரிப்பு மற்றும் அதனை மேம்படுத்தும் திட்டத்துக்காக 80 பில்லியன் யென்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger