படிப்பின் இடையிலேயே ஆஸ் திரியாயூதரன் உயர்நிலைப்பள்ளியில் கணிதப் பேராசிரியராக சேர்ந்தார். நட்சத்திரங்களை எண்ண முடியுமா என்பதைத்தான் இருப்பதி லேயே கஷ்டமான கணக் காக நாம் சொல்வோம். ஒரு கணித மேதையாக கெப்ள ருக்கு இந்தக் கஷ்டக் கணக்கு பிடித்திருந்தது. வானியல் பற்றியே அவர் எந்நேரமும் சிந்தித்தார். பல வருட அவதானிப் புக்குப் பிறகு, வானில் கோள்கள் அசை கின்றன.
ஆனால், அவை ஒரு குறிப்பிட்ட விதியின் படி சீராகவே நகர்கின்றன என்பதை கெப்ளர் கண்டுபிடித்தார். வானியலை ஓர் விஞ்ஞானத் துறையாய் ஆக்கிய பெருமை இவரையே சாரும். தொலை நோக்கியில் ஒளி எவ்வாறு ஊடுருவு கிறது என்பதை ஆய்வு செய்து, இவர் உருவாக்கிய மாதிரி தொலை நோக் கியை ஆதாரமாக வைத்துத் தான் கலிலி யோ தன் முதல் தொலை நோக்கியைப் படைத்தார்.
கணிதத் துறையிலும் கெப்ளர் சாதிக்காமல் விடவில்லை. மிகச்சிறு எண் கணக்கியலை ஆரம் பித்து கால்குலஸ் எனும் துறையைத் துவக்கியவர் இவரே. அதுவே, பிற்காலத் தில் கால்குலஸ் கணிதத் தை வளர்ச்சி அடையச் செய்ய நியூட்டனுக்கு உத வியது. சூரியனை கோள்கள் சுற்றி வருகின் றன என்ற பரிதி மய்யக் கோட்பாட்டை ஆதரித்த கெப்ளர், அதற்காக வான வியல் ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட ஈடுபட, அவரது பார்வைத்திறன் பாதிக் கப்பட்டது. இருப்பினும் விடாது போராடி, கோள் இயக்க விதிகள் எனப்படும் மூன்று விதிகளை வானியல் துறைக்குத் தந்தார் அவர். கெப்ளர் சில காலம் நோயுற்று 1630ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி தனது 59ஆவது வயதில் காலமானார். 1604ஆம் ஆண்டில் அவர் கண்டு பிடித்த புதிய விண்மீனுக்கு கெப்ளர் சூப்பர்நோவா என இப்போது பெயரிட்டி ருக்கிறார்கள்.
|
உலகையே அசைத்தவரின் மறுபக்கம்!
Labels:
அறிவியல்

Post a Comment