தென்மராட்சியில் 24 பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் கோட்டாபய வழங்கி வைப்பு / லேகோ நிறுவனத்தில் பல லட்சம் கொள்ளை
திருமலை புல்மோட்டை மஹசேன்புர பகுதியில் தம்பதியினரை கொலை செய்த சம்பவத்தின் இரு சந்தேகநபர்களும் எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
19 வயதான பெண்ணொருவரும் உயிரிழந்த தம்பதியினரின் 16 வயதான மகளுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களான மகளுக்கும், அவர்களது உறவினரான பெண்நண்பிக்கும் தகாத உறவு (ஒரினச் சேர்க்கை) காரணமாகவே இக்கொலை நடைபெற்றதாக சந்தேகிக்கப் படுகிறது.
இக் கொலையுடன் தொடர்புடைய சந்தேநபர்கள் சம்பவ தினத்தன்று கந்தானை பகுதியில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுடன் இருந்த உயிரிழந்த தம்பதியினரின் 7 வயதான மற்றுமொரு மகளும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டிருந்தார்.
சிறுமியை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 20ம் திகதி அதிகாலை கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு 39 மற்றும் 36 வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தென்மராட்சியில் 24 பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் கோட்டாபய வழங்கி வைப்பு-
யாழ். தென்மராட்சி கல்வி வலையத்தைச் சேர்ந்த 24 பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான சீருடைகள் மற்றும் அதிபர், ஆசிரியர்ககளுக்கு உடைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வு இன்று 52 ஆவது படைத்தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. இதன் பிரதம அதிதியாக பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார்.

தென்மராட்சியைச் சேர்ந்த 24 பாடசாலை மாணவர்கள் 1500 பேருக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளதுடன் 24 அதிபர்கள் மற்றும் 175 ஆசிரியர்களுக்குமான உடைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத்தின் கோரிக்கைக்கு இணங்க கனடாவில் உள்ள மொறெய் சோண்டர் ஜெயதிலக, இலங்கையில் உள்ள அஜித் குமார சேனாநாயக்க, றொபேட் உபுல் அனுர சாந்த, அநுர தர்மரட்ண பத்திரண ஆகியோரே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சீருடைகளை வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக 20 இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
நாகொடை லேகோ நிறுவனத்தில் பல லட்சம் கொள்ளை-
களுத்துறை நாகொடை, ஜம்புகஸ்முள்ள பிரதேசத்தில் உள்ள இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்குள் (லேகோ) நுழைந்த இருவர் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பல லட்சம் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இன்றுபகல் வேளையில் இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கொகுவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Post a Comment