லண்டனில் குஜராத்தை சேர்ந்த தாயும் இரு குழந்தைகளும் மர்மமான முறையில் மரணம்.



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியர்கள் லண்டனில் மர்ம மரணம்!

லண்டன்: லண்டனில் குஜராத்தை சேர்ந்த மூவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள மிட்கிராப் ரூயிசிலிப்பில் குஜராத்தை சேர்ந்த ஹீனா சோலங்கி(34) என்ற பெண்  அங்குள்ள பள்ளியில்  லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹீனா சோலங்கி மற்றும் அவரது பெண் குழந்தைகள் ஜேஸ்மின் 9, பிரிஷ் 4 ஆகிய மூவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். ஆனால் இந்த இறப்பிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

 இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹீனா சோலங்கி லண்டனில் அவரது கணவரின் பெற்றோருடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.இன்னேரம்.



Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger