கவனிப்பார் அற்று சவூதி பாலத்திற்கு அடியில் அமர்ந்திருக்கும் இலங்கைப் பணிப்பெண்கள்.




















ஜி
த்தா - சரப்பியா பாலத்திற்கருகில் தாம் நிர்க்கதியான நிலையில் தாம் அவதிப்படுவதாக குறிப்பிட்ட பகுதியிலிருந்து சகோதர இணையமான ஜப்னா முஸ்லிமிற்கு  இன்று ஞாயிற்றுக்கிழமை சற்றுநேரத்திற்கு முன்னர் தொடர்புகொண்ட இலங்கை சகோதரிகள் கண்ணீர் மல்க குறிப்பிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் குறிப்பிட்டதாவது,

தாம் நிர்க்கதியான நிலையில் காணப்படுவதாகவும், உடைகளை மாற்றுவதற்கோ, மலசலகூடம் செல்லவோ தாம் பெரும் கஷ்டப்படுவதாகவும் தமது அவலங்கள் குறித்து இலங்கை அரசாங்கமும், சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகமும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

சவூதி அரேபியா எஜமானர்களால் தாம் பணிபுரிந்த வீடுகளிலிருந்து துரத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதும் பாலத்திகு அடியில் தஞ்சமடைந்திருக்கும் தாம் இலங்கை தூதரகத்திற்கு நீதிகேட்டு சென்றால் அங்கும் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாவதாக கவலையுடன் குறிப்பிடும் அந்த முஸ்லிம் சகோதரிகள் குறித்த பாலத்திற்கு அடியில் இன்னும் எத்தனை நாட்கள்தான் ஏனைய ஆண்களுடனும், ஏனைய நாட்டவர்களுடனும் மிகச்சிறிய பகுதியில் அமர்ந்திருப்பது எனவும் குரல் வினவுகின்றனர்.

அதேவேளை சவூதி அரேபியாவிலிருந்து தொடர்புகொண்ட மற்றும் சில சகோதரர்கள், சவூதி அரேபியாவில் தவ்வா பிரச்சாரத்தில் ஈடுபடவென பல இலங்கை அமைப்புக்கள் இருப்பதாகவும், எனினும் அல்லற்படும் இலங்கை முஸ்லிம்கள் குறித்த அந்த அமைப்புக்கள் எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையெனவும் குற்றம் சுமத்தினார்கள்.

சவூதி அரேபியாவில் பயான் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலும், அதற்கு அழைப்பு விடுப்பதிலும், அந்த நிகழ்வை ஊடகங்களுக்கு அனுப்பி பிரபல்யம் தேடுவதிலும் ஆர்வம் கொண்டுள்ள இந்த இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள் தமது அவலம் குறித்து எத்தகைய நடவடிக்கையிலும் இதுவரை ஈடுபடவில்லையெனவும் அவர்கள் கவலையுடன் குறிப்பிட்டனர்.
நன்றி:JM

சவுதிக்கான இலங்கை தூதரகம் ஏன் இவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இவர்களுக்கான தீர்வுகள் என்ன ஏன் இப்படி இருக்கிறார்கள். விரைவில் மேலதிக விபரம் இம்போட்மிரரில் எதிர் பாருங்கள்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger