பண்ணை வீட்டில் முஷரப்புக்கு சிறை: வக்கீல்கள் சந்திக்க தடை


பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப். இவர் ஒரு வழக்கில் ஆஜராக கோர்ட்டுக்கு சென்றபோது அவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். எனவே, இங்கிலாந்து தப்பிச்சென்ற அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மே 4-ந்தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பாதுகாப்பு காரணங்கள் கருதி அவரது பண்ணை வீட்டிலேயே முஷரப் சிறை வைக்கப்பட்டுள்ளார். 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த பண்ணை வீடு பல சொகுசு வசதிகளை கொண்டது. நீச்சல்குளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. பாதுகாப்பு கோபுரமும் உள்ளது. எனவே, அது கிளைச் சிறையாக மாற்றப்பட்டுள்ளது.
பல அறைகளை கொண்ட சொகுசு பண்ணை வீட்டில் முஷரப் பயன்படுத்த 2 அறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அவருடன் குடும்பத்தினர் யாரும் தங்க அனுமதி இல்லை. மேலும் அவரை சந்திக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உதவியாளர்களுக்கும் அனுமதி கிடையாது.
எனவே, அவர் தனிமை சிறையில் வாடுகிறார். முஷரப்புக்கு தலிபான் தீவிரவாதிகளின் கொலை மிரட்டல் இருப்பதால் அவரது வீட்டை சுற்றி ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அவரை கண்காணிக்க 2 சிறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முஷரப் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. ராவல் பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் அவர் மீதான வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.
பொதுவாக ஜெயிலில் இருக்கும் அனைத்து குற்றவாளிகளுக்கும் வக்கீல்கள் சந்திக்க அனுமதி உண்டு. ஆனால் முஷரப்பை பொறுத்தவரை அவரை வக்கீல்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger