பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமை விவகாரங்களில் இலங்கையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய சாதகமான மாற்றங்கள் ஏற்படும் வரையில் அமர்வுகளை நடத்தக் கூடாது என கோரியுள்ளது.
பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் தற்போதைய இலங்கை அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியுள்ளது என தெரிவித்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் கிரமமான விசாரணைகளோ நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதனை இலங்கை புரிந்து கொள்ளக் கூடிய வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமை விவகாரங்களில் சர்வதேச நியமங்களை இலங்கை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என பிரட் அடம்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment