இலங்கை மீதான முதலீடுகளை அதிகரிக்கவுள்ள சீனா



சீனா, இலங்கை இடையிலான வர்த்தக தொடர்புகள் மற்றும் முதலீடுகளை மேலும் அதிகரிக்க போவதாக  சீனாவின் வர்த்தகத்துறை பிரதியமைச்சர் சென் ஜியாங் தெரிவித்துள்ளார். 
அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் அதிகரிப்பதற்காக சீனா இரண்டு துறைகள் குறித்து கவனம் செலுத்த எண்ணியுள்ளதாகவும்  இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் அதேவேளை,  வர்த்தக பற்றாக்குறையை போக்க இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா வழங்கி வரும் உதவிகளுக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்ட ஜனாதிபதி, சீனாவின் ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நிர்மாணிப்புகளை இலங்கை மக்கள் நினைவில் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger