கண்டியில் இன்று முதல் சர்வதேச மட்ட போக்குவரத்துத் திட்டம்



கண்டியில் இன்று முதல் சர்வதேச மட்ட போக்குவரத்துத் திட்டம்


இலங்கையில் முதல் முறையாக சர்வதேச மட்ட வீதி கடவை மற்றும் போக்குவரத்து திட்டங்களை செயற்படுத்த கண்டி பொலிஸ் மற்றும் கண்டி மாநகர சபை தீர்மானித்துள்ளது. 

இன்று (23) தொடக்கம் இப்புதிய போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படும் என மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.என்.பி.அம்பன்வல தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களாக புதிய போக்குவரத்து திட்டத்திற்கான ஒத்திகை பார்க்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

புதிய போக்குவரத்து திட்டத்திற்கு அமைய கண்டி நகரை அண்மித்த பிரதான வீதிகளில் ஒருபக்க போக்குவரத்து செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger