புகையிரத ஊழியர்களால் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
புகையிரத பணியாளர்களுக்கான சம்பள பிரச்சினை குறித்து தீர்வு காணப்படாமையை கண்டித்தே இப் போராட்டத்தை பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தன.
இந்த வேலைநிறுத்த அறிவிப்பை இடைநிறுத்தியுள்ளதாக தொழிற்சங்கங்கள் இன்று மாலை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment