சவூதியில் அநாதரவான நிலையில் இருந்த இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு




சவூதியில் ஜெட்டா நகரில் அநாதரவான நிலையில் இருந்த இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு தொழில்களுக்காக இலங்கையில் இருந்து சென்ற சுமார் 6000 பணியாளர்கள் தங்களின் தொழில் வாய்ப்பை இழந்த நிலையில் சவூதியில் அநாதரவாக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவருக்கும் இலங்கைக்கு திரும்புவதற்கான வாய்ப்புக்கள் கிட்டவில்லை.

இந்த நிலையில் அவர்கள் ஜெட்டா நகரில் உள்ள சேர்பியா பாலத்துக்கு அடியில் ஒன்று கூடி வசித்து வந்தனர்.

அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்கும் முயற்சியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில் அவர்களுக்க பொது மன்னிப்பு வழங்கி, விரைவில் அவர்களை இலங்கைக்கு அனுப்ப சவுதி அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, சவுதி அரேபிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger